விடுதலைப் புலிகளை இராணுவம் வெற்றிக் கொண்டது எப்படி... உயிருக்கு பயந்து தப்பி ஓடும் ராஜபக்சர்கள்
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றது. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம்.
நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும். '
1 விரைவில் ராஜபக்சர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வருவார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியினரை விட எம்மவர்களும் அரசியல் சூழ்ச்சி செய்கின்றனர் எனவும் அவர் கூறினார்.
மேலும் படிக்க >>> விரைவில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் ராஜபக்சர்கள்!
2 இலங்கையை விட்டு தப்பியோடியதாக கூறப்படும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டுக்குத் திரும்பியவுடன் அவர் யுத்தக்குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச ஊடகங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க >>> இலங்கை திரும்பியதும் கோட்டாபயவுக்கு காத்திருக்கும் நெருக்கடி
3 அண்மையில் கலா ஏரி தேசிய பூங்காவில் வசித்து வந்த பரண என்ற யானை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தது. பரண யானையின் இறுதிச் சடங்கு நடைபெற்ற போது விசேட சம்பவம் ஒன்றின் மீது பலரும் அவதானம் செலுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க >>> இலங்கை மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய யானை
4 "நான் எப்போதும் மக்களுடன்தான் இருக்கின்றேன். நாட்டை விட்டு ஓடும் எண்ணம் எனக்குக் கிடையாது. விடுதலை புலிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுத்த நான், ஏன் நாட்டைவிட்டு ஓட வேண்டும் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் படிக்க >>> விடுதலை புலிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுத்த நான் ஏன் தப்பித்து ஓட வேண்டும்
5 நாடாளுமன்றத்திற்கு அருகில் பொல்துவ சந்தியில் கடந்த 13 ஆம் திகதி எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தது தான் அல்ல எனவும் மக்கள் விடுதலை முன்னணியே அதனை ஆரம்பித்தது எனவும் சமூக ஊடக செயற்பாட்டாளரான பெத்தும் கெர்ணர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>>ஜே.வி.பியே நாடாளுமன்றத்தை முற்றுகையிட மக்களை அழைத்தது
6 சமகாலத்தில் தென்னிலங்கையில் அரசாங்கத்தின் அதிரடியான செயற்பாடுகள் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் அவர்கள் எதிர்பாராத ஒன்றாக உள்ளது.
மேலும் படிக்க >>>ரணிலின் அதிரடியின் பின்னணியிலுள்ள ரகசியம்
7 இலங்கையின் இறுதிக்கட்ட போரில் பல நாடுகளின் உதவியால் மட்டுமே தமிழீழ விடுதலை புலிகளை இலங்கை ராணுவத்தால் வெற்றிகொள்ள முடிந்தது என ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>> இலங்கை ராணுவம் இறுதிக்கட்ட போரில் பல நாடுகளின் உதவியை பெற்றே வெற்றியை கண்டது
8 “அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கைகளிலே பொலிஸார் ஈடுபட்டுள்ளனர் எனவும் இதற்கு எதிராக எவரும் கூக்குரல் எழுப்ப முடியாது" ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>>எவரும் கூக்குரல் எழுப்ப முடியாது - ரணில்
9 எரிபொருள் இறக்குமதியை நேரடியாக மேற்கொள்வதற்கு விசேட அனுமதி பெற்றுக்கொடுக்கப்படும் என எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேயசேகர உறுதியளித்துள்ளதாக வடக்கு மாகாண எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் இணையத்தின் தலைவர் ஜெ.ஸ்ரீசங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>>கஞ்சன விஜயசேகர அளித்த வாக்குறுதி
10 அலரி மாளிகையை போராட்டகாரர்கள் முற்றுகையிட்ட பின்னர், அங்கிருநத இரண்டு தொலைக்காட்சி பெட்டிகளை கொள்ளையிட்டு சென்ற ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.