அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களையே கைது செய்கின்றோம்: எவரும் கூக்குரல் எழுப்ப முடியாது - ரணில்
“அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கைகளிலே பொலிஸார் ஈடுபட்டுள்ளனர் எனவும் இதற்கு எதிராக எவரும் கூக்குரல் எழுப்ப முடியாது" ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலார்கள் சந்திப்பொன்றில் நேற்று(28) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர் கைது
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அஹிம்சை வழியில் போராடியவர்களில் அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களும் உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
"அமைதி வழியில் போராட்டம் செய்தவர்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்க முடியாது.

அமைதி வழி போராட்டக்காரர்களை நான் அன்றும் மதித்தேன் இன்றும் மதிக்கின்றேன்.
ஆனால், போராட்டம் என்ற பெயரில் பொது சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தவர்களையும், அரச கட்டடங்களுக்குள் நுழைந்து பொருட்களை திருடியவர்களையும் மன்னிக்க முடியாது.
அவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபர்களை கைதுசெய்து வருகின்றனர்.
தண்டனை
குற்றாவளிகளுக்கு எதிராக நீதிமன்றம் தண்டனையை வழங்கும். இதில் எவரும் தலையிட முடியாது.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் அத்துமீறி நுழைந்து ஒளிபரப்பு சேவைகளுக்கு இடையூறு விளைத்தவர்களை எப்படி மன்னிக்க முடியும்? அவர்களை எப்படி அகிம்சை வழி போராட்டக்காரர்கள் என்று கூற முடியும்? ”எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
| ஆசிரிய உதவியாளர்களின் இறுதி தேர்வுக்கான முடிவுகள் தொடர்பில் ஆசிரியர் சேவை சங்கம் விடுத்துள்ள கோரிக்கை |
விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam
மீண்டும் பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் அஜித்.. இதற்காகதான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் Cineulagam
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri