ரொனால்டோவின் 1,000 கோல்கள் இலக்கு.. ஓய்வு குறித்து எடுத்துள்ள தீர்மானம்
கால்பந்து உலகின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போதைய பருவத்தின் முடிவில் தொழில்முறை கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வுபெற உள்ளதாக அறிவித்துள்ளார்.
வரலாற்றுச் சாதனை
20 ஆண்டுகளுக்கும் மேலான தனது கால்பந்து பயணத்தை நிறைவு செய்யவுள்ள 41 வயதான ரொனால்டோ, "இதுவே எனது கடைசி ஆண்டாக இருக்கலாம், ஒரு வரலாற்றுப் பெருமையுடன் விடைபெற விரும்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை கிளப் மற்றும் சர்வதேச போட்டிகளில் 976 கோல்களை அடித்துள்ள அவர், 1,000 கோல்கள் என்ற வரலாற்றுச் சாதனையை எட்ட இன்னும் 24 கோல்களே தேவைப்படுகின்றன.
சவுதி அரேபியாவின் அல் நசர் (Al-Nassr) அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ, சர்வதேச கால்பந்தில் அதிக கோல்கள் (146) அடித்த சாதனையைத் தன்வசம் வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.