மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணால் ஏற்பட்ட சர்ச்சை - உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அவசர மனு
ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாக டென்னசி மாநிலத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்டா பைக் என்ற பெண்ணின் தண்டனை இறுதிக்கட்டத்தில் இருக்கும் ஏற்பட்ட கோளாறு காரணமாக தண்டனை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கிறிஸ்டா பைக் என்ற பெண்ணொருவர், தன்னுடைய 19 வயது தோழியொருவரை கொலைச் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் சுமாராக 30 ஆண்டுகளுக்கு மேலாக குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, சிறையில் இருந்து வரும் நிலையில், அவருக்கு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மரண தண்டனை நிறைவேற்றுவதற்காக கிறிஸ்டா பைக்கிற்கு கொல்லும் திறன் கொண்ட மருந்து, தடுப்பூசியில் செலுத்தப்பட்ட போதிலும், அவர் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டனை நிறைவேற்றப்பட்ட பின் நடந்த சம்பவம்
மாறாக, இந்த செயன்முறை தோல்வியடைந்துள்ளதுடன், அந்த இரசாயனம் செலுத்தப்பட்ட பின்னரும் பைக் உயிருடன் இருந்ததாகவும், பின்னர் அவர் மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் அங்கிருந்தவர்கள் தெரிவிக்கையில்,
தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர், பைக் கடுமையான வலியை உணர்ந்ததாக கூறினார். அதன் பின்னர், அவருடைய கை குறித்து பல கருத்துக்களை கூறினார் என்றும், ஒரு கட்டத்திற்கு பின்னர் அவர் தனது கால்களை தீவிரமாக உதைத்த காரணத்தினால் அவரை மூடியிருந்த போர்வைகள் கீழே ஆரம்பித்து விட்டன எனக் குறிப்பிட்டுள்ளனர்.
கொல்லும் திறன் கொண்ட மருந்தை தடுப்பூசியால் செலுத்தியதை நேரில் கண்ட பைக்கின் சட்டத்தரணிகள், தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னரும் அவர் சுயநினைவுடனும் இதயத் துடிப்புடனும் இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
உயர் நீதிமன்றத்திற்கு சென்ற அவசர மனு
இதனைத் தொடர்ந்து, மரண தண்டனை நிறைவேற்றத்தை நிறுத்தி வைக்குமாறு கோரி, அவர்கள் கூட்டாட்சி நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மரண தண்டனை முயற்சியின் போது என்ன தவறு நடந்தது என்பதைக் கண்டறிய விரிவான மற்றும் சுதந்திரமான ஆய்வுக்கு உத்தரவிடப்போவதாக டென்னசி ஆளுநர் பில் லீ (Bill Lee) தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த ஆண்டில் மாநிலம் நடத்தத் திட்டமிட்டிருந்த அடுத்தகட்ட மரண தண்டனை நிறைவேற்றம் திட்டமிட்டபடி நடைபெறாது என்றும் அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், சிறுவயதில் பைக் சந்தித்த கடுமையான கொடுமைகள் மற்றும் மன உளைச்சல் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும் என அவரது சட்டத்தரணிகள் வாதிட்டுள்ளனர். ஆனாாலும் அமெரிக்க உயர் நீதிமன்றம் இந்த மரண தண்டனையை நிறைவேற்ற அனுமதி அளித்துள்ளது.
நள்ளிரவு முதல் திடீரென உயர்த்தப்பட்ட எரிபொருள் விலை! பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு