டைட்டானிக் கப்பல் விபத்தில் இறுதிவரை போராடிய அதிகாரியின் அஞ்சல் அட்டை - ஏலத்தில் அமோக விற்பனை

By Amal Nov 22, 2026 07:47 PM GMT
Report

1912ஆம் ஆண்டு டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளான பொழுது, பயணிகளைக் காப்பாற்றுவதற்காக இறுதிவரை பணியாற்றிய கப்பலின் மூத்த வயர்லெஸ் தொடர்பு அதிகாரியின் அஞ்சல் அட்டை ஒன்று, ஏலத்தில் 32,000 பவுண்ட்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்பட்ட அதிகபட்ச ஏலத் தொகையான 20,000 பவுண்ட்டாக இருந்த நிலையில், அதனை விட 12000 பவுண்ட்டு அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் சர்ரே (Surrey) பகுதியைச் சேர்ந்த 25 வயதான ஜெக் பிலிப்ஸ் (Jack Phillips), 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் திகதி, சவுத்தாம்ப்டன் துறைமுகத்தில் டைட்டானிக் கப்பல் தரித்து நின்ற போது, தனது சகோதரி எல்சிக்கு இந்த அஞ்சல் அட்டையை எழுதியுள்ளார்.

டைட்டானிக் கப்பலில் கிடைக்கப் பெற்ற அஞ்சல் அட்டை

மேற்படி அட்டையில், “உங்களுடைய கடிதத்திற்கு மிக்க நன்றி. இங்கு அற்புதமான வானிலை நிலவுகிறது. நேற்று கவுஸ் (Cowes) பகுதிக்குச் சென்றிருந்தேன். கப்பல் புறப்படுவதற்கு முன்னர் மீண்டும் எழுதுகிறேன்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

டைட்டானிக் கப்பல் விபத்தில் இறுதிவரை போராடிய அதிகாரியின் அஞ்சல் அட்டை - ஏலத்தில் அமோக விற்பனை | Historic Postcard From A Titanic Officer

டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதியதைத் தொடர்ந்து, பயணிகளைக் காப்பாற்றுவதற்காக ஜெக் பிலிப்ஸ் தனது வயர்லெஸ் தொடர்பு சாதனத்தின் மூலம் அவசர உதவிச் செய்திகளைத் தொடர்ந்து அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பலில் நீர் புகுந்து தனது கால்களைச் சூழ்ந்த பின்னரும் அவர் தனது பணியைக் கைவிடாமல் தொடர்ந்து உதவிச் செய்திகளை அனுப்பியுள்ளார்.

அதன் பின்னர் கப்பலை விட்டு வெளியேறிய அவர், கவிழ்ந்த நிலையில் இருந்த மடிக்கக்கூடிய உயிர்காப்புப் படகின் மீது ஏறியிருந்தார். எனினும், கடுமையான குளிர் காரணமாக ஏற்பட்ட உடல் வெப்ப இழப்பால் அவர் உயிரிழந்துவிட்டார்.

ஏல நிறுவனமான ஹென்றி ஆல்ட்ரிட்ஜ் அன்ட் சன் நிறுவனத்தின் ஏலதாரர் ஆண்ட்ரூ ஆல்ட்ரிட்ஜ், ஜெக் பிலிப்ஸை டைட்டானிக் பேரழிவின் உண்மையான வீரர்களில் ஒருவர் எனப் புகழ்ந்துள்ளார்.

705 பேர் மீட்டு

டைட்டானிக் கப்பல் விபத்தில் சுமார் 1,500 பேர் உயிரிழந்த நிலையில், 705 பேர் மீட்கப்பட்டனர். ஜெக் பிலிப்ஸ் அனுப்பிய அவசர உதவிச் செய்திகளின் காரணமாகவே RMS கார்பாத்தியா (Carpathia) கப்பல் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிர் பிழைத்தவர்களை மீட்க முடிந்தது.

டைட்டானிக் கப்பல் விபத்தில் இறுதிவரை போராடிய அதிகாரியின் அஞ்சல் அட்டை - ஏலத்தில் அமோக விற்பனை | Historic Postcard From A Titanic Officer

ஜெக் பிலிப்ஸ் தனது ஆரம்பகால தொழிலாக உள்ளூர் தபால் அலுவலகத்தில் பணியாற்றியபோது மோர்ஸ் குறியீட்டைக் (Morse Code) கற்றுக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில், நூற்றாண்டுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த அஞ்சல் அட்டை, டைட்டானிக் பேரழிவில் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக இறுதிவரை போராடிய ஒரு வீரரின் நினைவுச் சின்னமாகக் கருதப்படுகின்றது.  

லிமினியின் புதிய அவதாரம்..! நாமலின் முக்கிய சாட்சியை அழைப்பதில் சிக்கல்

லிமினியின் புதிய அவதாரம்..! நாமலின் முக்கிய சாட்சியை அழைப்பதில் சிக்கல்

மத - இனத்தால் மக்களைப் பிரிக்க மாட்டோம்..! NPP சார்பில் சுந்தரலிங்கம் பிரதீப் உறுதி

மத - இனத்தால் மக்களைப் பிரிக்க மாட்டோம்..! NPP சார்பில் சுந்தரலிங்கம் பிரதீப் உறுதி


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US