ஈரான் – அமெரிக்கா இடையே தொடர் பதற்றம்: பஹ்ரைன் மற்றும் ஓமன் கடற்பகுதியில் தாக்குதல் சம்பவங்கள்
பஹ்ரைனில் உள்ள அல்-ரஃபா மற்றும் அவாலி விமானப்படைத் தளங்களில் அமைந்துள்ள அமெரிக்காவின் வான் பாதுகாப்பு ரேடார் அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதாக, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.
இதற்கிடையில், பஹ்ரைன் அதிகாரிகள் அந்த நாட்டின் தொழிற்சாலை ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இதனால் அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் சிவில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
தீ விபத்து
எனினும், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹோர்முஸ் நீரிணைக்கு கிழக்கே தடைசெய்யப்பட்ட கடற்பகுதியில் கடற்படை கண்ணிவெடியில் மோதியதால் எண்ணெய் கப்பல் ஒன்று தீப்பற்றியதாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஓமானின் கசாப் (Khasab) பகுதிக்கு வடக்கிலும் கிழக்கிலும் பயணித்த இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் அடையாளம் தெரியாத ஏவுகணைகள் அல்லது தாக்குதல் பொருட்களால் தாக்கப்பட்டதாக பிரித்தானியாவின் கடல்சார் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
கப்பல் போக்குவரத்து பாதிப்பு
இந்தச் சம்பவங்கள் மத்திய கிழக்கில், குறிப்பாக ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள கடற்பகுதியில் பாதுகாப்புப் பதற்றம் அதிகரித்துள்ளதைக் காட்டுகின்றன.

இதனால்,உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படும் பட்சத்தில் சர்வதேச எண்ணெய் சந்தையிலும் தாக்கம் ஏற்படக்கூடும்.
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan