முன்னாள் ஜனாதிபதிகளுக்கான செலவினம் தொடர்பில் நளிந்த வெளியிட்ட தகவல்
முன்னாள் ஜனாதிபதிகளின் பராமரிப்புக்கான அரசாங்கச் செலவினம், 2024ஆம் ஆண்டில் ரூ. 110.51 மில்லியனில் இருந்து 2026ஆம் ஆண்டில் ரூ. 4.39 மில்லியனாகக் குறைந்துள்ளது என அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சர் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, பட்டியலிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகளிலேயே மிக அதிகமான செலவினமாக, 2024 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்காக அரசாங்கம் ரூ. 61.66 மில்லியனைச் செலவிட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சவிற்கான செலவு
2024ஆம் ஆண்டில் மற்ற முன்னாள் ஜனாதிபதிகளுக்கான செலவினம் பின்வருமாறு காணப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க – ரூ. 13.69 மில்லியன்
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன – ரூ. 18.57 மில்லியன்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச – ரூ. 11.02 மில்லியன்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – ரூ. 2.53 மில்லியன்
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாசவுக்காக ரூ. 3.04 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.

இருப்பினும், 2026ஆம் ஆண்டின் செப்டம்பர் 30 வரையான புள்ளிவிவரங்களின்படி, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு தலா ரூ.880,000 வரை செலவிடப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டில் ஹேமா பிரேமதாசவுக்காக எந்தச் செலவினமும் பதிவு செய்யப்படவில்லை.
அதன்படி, ஐந்து முன்னாள் ஜனாதிபதிகளுக்கான மொத்த செலவினம் 2024இல் ரூ. 110.51 மில்லியனாக இருந்த நிலையில், 2026இல் ரூ. 4.39 மில்லியனாக குறைக்கப்பட்டுள்ளது.