இம்ரான் கான் விவகாரம்: விவாதத்தைத் தடுத்த முடிவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தொடர்பான விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதைத் தடுத்த முடிவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்விக்குட்படுத்தியுள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுவிக்கக் கோரும் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரித்தமை குறித்து,எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான இராஜதந்திர உறவுகள் பாதிக்கப்படக்கூடும் என்ற காரணத்தினால் இந்த விவாதம் தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
கோரிக்கை
எனினும், அரசாங்கத்தின் முடிவுகளைப் பற்றி கேள்வி எழுப்புவதற்கும் விளக்கம் கோருவதற்கும் எதிர்க்கட்சிக்கு உரிமை இருப்பதாக சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

மேலும், அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.