ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு யோசனை: உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகரிடம் ஒப்படைப்பு
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் அரசாங்கம் முன்வைத்துள்ள (ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு யோசனை) Prevention of Organized Crime Bill தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த யோசனையின் அரசியலமைப்புச் சட்டபூர்வத்தன்மையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 26 மனுக்கள் தொடர்பான விசாரணை நவம்பர் 9ஆம் திகதி நிறைவடைந்தது.
விசாரணையின்போது அரசாங்கம் பல திருத்தங்களை முன்மொழிந்துள்ளதாக சட்டமா அதிபர் தரப்பு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
முக்கியமாக முன்மொழியப்பட்ட திருத்தங்கள்
- சந்தேகநபர்களை 72 மணித்தியாலங்கள் வரை தடுத்து வைக்கும் ஏற்பாடு 48 மணித்தியாலங்களாகக் குறைக்கப்படும்.

- பச்சை குத்தல்கள் மற்றும் உடலில் காணப்படும் அடையாளங்கள் தொடர்பான விதிகள் நீக்கப்படும்.
- மதுவரிச் சட்டத்தின் கீழான குற்றங்கள் யோசனையிலிருந்து நீக்கப்படும்.
- பதிப்புரிமை மீறல் தொடர்பான குற்றங்களும் நீக்கப்படும்.
- கடுமையான குற்றங்கள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு முன் நீதிமன்ற அனுமதி பெற வேண்டும் என்ற விதியும் நீக்கப்படும்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களைத் தடுத்து வைப்பது மற்றும் தடுப்புக்காவல் உத்தரவுகளைப் பிறப்பிப்பது தொடர்பான மேலும் சில திருத்தங்கள் பின்னர் பரிசீலிக்கப்படும் எனவும் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.