சவுதி - யேமன் பதற்றம் அதிகரிப்பு! ரியாத்தில் விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கைகள்
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் தொடர்ந்து மூன்றாவது இரவாக அவசர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு, பின்னர் அவை நீக்கப்பட்டுள்ளன.
இரண்டு நாட்களுக்கு முன்னர், நாட்டின் மிக உயரமான கட்டடமான பொது முதலீட்டு நிதியத்தின் (PIF) வானளாவிய கட்டடம் ஹூதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹூதிகள் எச்சரிக்கை
இதற்கிடையில், சவுதியின் மின் உற்பத்தி நிலையங்கள், செங்கடல் துறைமுகங்களான ஜெட்டா மற்றும் ரியாத்தின் நிதி மையம் ஆகியவற்றைத் தாக்குவோம் என ஹூதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்குப் பதிலடியாக, யேமனில் ஹூதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள ஹொதெய்தா துறைமுகம் மற்றும் தலைநகர் சனாவில் சவுதி தலைமையிலான கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சவுதி அரேபியா மற்றும் யேமன் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.