டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்திற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் போராட்ட இயக்கத்தின் முக்கிய செயற்பாட்டாளரான வசந்த முதலிகேவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு மக்களின் பயோமெற்றிக் தரவுகளை இந்திய நிறுவனமொன்றிடம் வழங்கி, டிஜிட்டல் அடையாள அட்டைகளை விநியோகிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றில் இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை ஆட்சேபித்து இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மனுவில் பிரதிவாதிகளாக அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கோடீஸ்வரராக வேண்டியவர்... ரிஷி சுனக்குடன் பணியாற்ற Anthropic பங்குகளை விற்றுவிட்ட பிரித்தானியர் News Lankasri
நிகழ்ச்சியில் மிஷ்கின் என்னை தவறாக தொட்டாரா?... சர்ச்சைக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம் Cineulagam