போலிச் செய்திகளைப் பொறுத்துக் கொள்ள முடியாது: பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் போலிச் செய்திகள், தவறான தகவல்கள் மற்றும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட கருத்துக்களை இலங்கை பொலிஸார் அனுமதிக்க மாட்டார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப். யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், ஊடகச் சுதந்திரம் என்பது வரம்பற்ற அதிகாரம் அல்ல என்றும், அது சமூகப் பொறுப்புடன் செயற்படுத்தப்பட வேண்டியது என்றும் குறிப்பிட்டார்.
பொதுமக்களின் அமைதி
பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 56ஆம் பிரிவைச் சுட்டிக்காட்டிய அவர், நாட்டில் அமைதியையும் சட்டம் ஒழுங்கையும் பாதுகாப்பது பொலிஸாரின் கடமை எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில்,போலிச் செய்திகள் பொதுமக்களின் அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்க அனுமதிக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.