முழு இலங்கையையும் உலுக்கிய சோகம்! ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் விடைபெறவுள்ள குடும்பம்
கடுவலையில் தீ விபத்தில் உயிரிழந்த தாய், தந்தை மற்றும் குழந்தைகளின் இறுதிக்கிரியைகள் இன்றைய தினம் (21.11.2026) தலாஹேன பொது மயானத்தில் இடம்பெறவுள்ளன.
கடந்த 19ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில், குறித்த கட்டடத்தில் மின்சார உபகரண விற்பனை நிலையமொன்றை நடத்தி வந்த 35 வயதுடைய நாரத சந்தருவன், அவரது 28 வயதுடைய மனைவி லக்ஷிகா மதுஷானி மற்றும் அவர்களது மகள்களான 5 வயதுடைய திலேனி ஹசன்யா, 2 வயதுடைய ஒனேலி பஹன்யா ஆகியோர் உயிரிழந்தனர்.
வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட சடலங்கள்
இந்த திடீர் தீ விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குறித்த நால்வரின் சடலங்கள், அவர்கள் வசித்து வந்த தலாஹேன பிரதேசத்திலுள்ள வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

பிரேதப் பரிசோதனை நடவடிக்கைகளின் பின்னர் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் வசித்த வீட்டிற்குச் சடலங்கள் கொண்டுவரப்பட்ட போது பெருமளவிலானோர் அங்கு கூடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் விசாரணை
உயிரிழந்த குடும்ப உறுப்பினர்கள் தலாஹேன பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும், சில நாட்களில் குறித்த வர்த்தகக் கட்டடத்தின் மேல் மாடியிலுள்ள பின்பக்க அறையொன்றில் தங்கியிருந்தமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தின் பின்னர் முல்லேரியா வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்ட சடலங்கள் மீதான திடீர் மரண விசாரணையின் பின்னர், சடலங்களைத் திறக்க முடியாதவாறு (சீல் வைத்து) உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சடலங்கள் மீதான இறுதிக்கிரியைகள் இன்று (21) தலாஹேன பொது மயானத்தில் இடம்பெறவுள்ளன.