மனைவியிடம் புறம் கூறிய நபரை நீதிமன்ற வளாகத்தில் வைத்து தாக்கிய கணவன்
மொனராகல, வெல்லவாய நீதவான் நீதிமன்றுக்கு வெளியில் சந்தேகநபர் மீது, ஒருவர் கத்திக் குத்து தாக்குல் மேற்கொண்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்றில் விசாரிக்கப்பட்ட சிவில் வழக்கு ஒன்றிற்காக நேற்று காலை முன்னிலையாகி, நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த சந்தேநபர் மீதே கத்தி குத்து தாக்குல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காயமடைந்த 42 வயதுடைய ஹம்பேகமுவ பகுதியைச் சேர்ந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கத்திக் குத்து தாக்குல்
அவர் கொழும்பில் தொழில் புரிந்து வருவதுடன், நேற்று கொழும்பிலிருந்து வழக்கு ஒன்றிற்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகி வெளியே வந்த சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.

தன்னைப் பற்றி தனது மனைவியிடம் புறம் கூறியமை மற்றும் சமூக வலைத்தளங்களில் தனது தொலைபேசி எண்ணைப் பதிவிட்டு அசௌகரியத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.
இதன் காரணமாக ஏற்பட்ட கோபத்தினால் இவ்வாறு கத்தியால் குத்தியதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
44 வயதுடைய ஹம்பேகமுவ பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பின் போது சந்தேகநபரும் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இது தொடர்பாக வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.