அமெரிக்காவில் 3இலட்சத்திற்கும் அதிகமான டொயோட்டா வாகனங்களுக்கு மீளழைப்பு!
காற்றுப்பை (Airbag) வெடிக்கும் அபாயம் காரணமாக, அமெரிக்காவில் Toyota மற்றும் Lexus நிறுவனங்களின் 314,029 வாகனங்களுக்கு பாதுகாப்பு மீளழைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
2002 முதல் 2017 வரை தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள Takata முன்பக்க பயணிகள் காற்றுப்பைகளில் இந்தப் பிரச்சினை கண்டறியப்பட்டுள்ளது.
அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம்
இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்ட வாகனங்கள் அறிவிக்கப்படுள்ளன.
- Toyota Corolla (2003–2008)
- Toyota Tundra (2005–2006)
- Toyota Sequoia (2005–2007)
- Toyota 4Runner (2016–2017)
- Lexus SC430 (2002–2010)
- Lexus IS250 (2011)
- Lexus GX460 (2017)
அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக காற்றுப்பை உதிரிப்பாகங்கள் சேதமடைந்து, விபத்தின்போது காற்றுப்பை விரிவடையும் போது உலோகத் துகள்கள் சிதறி பயணிகளுக்கு உயிருக்கு ஆபத்தான காயங்களை ஏற்படுத்தக்கூடும் என அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் (NHTSA) தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட வாகனங்களின் காற்றுப்பை உதிரிப்பாகங்கள் அல்லது முழு காற்றுப்பை அமைப்புகளும் Toyota மற்றும் Lexus அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களில் இலவசமாக மாற்றப்படும்.
வாகன உரிமையாளர்களுக்கு, 2026 டிசம்பர் 28, முதல் அறிவிப்புக் கடிதங்கள் அனுப்பப்பட உள்ளன.
வாகனத்தின் VIN எண்ணைப் பயன்படுத்தி Toyota அல்லது NHTSA அதிகாரப்பூர்வ இணையதளங்களில் மீளழைப்பு தொடர்பான விபரங்களைச் சரிபார்க்கலாம்.
நிகழ்ச்சியில் மிஷ்கின் என்னை தவறாக தொட்டாரா?... சர்ச்சைக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம் Cineulagam
கோடீஸ்வரராக வேண்டியவர்... ரிஷி சுனக்குடன் பணியாற்ற Anthropic பங்குகளை விற்றுவிட்ட பிரித்தானியர் News Lankasri