செங்கடலில் பதற்றம் : ஹொடைடா துறைமுகம் மீது தாக்குதல்
ஈரான் ஆதரவு யேமன் ஹூதிகளுக்கு எதிராகப் போரிடும் சவூதி தலைமையிலான கூட்டணி, ஹூதிகளின் திறன்களை அழிக்கும் நோக்கில் செங்கடல் துறைமுகமான ஹொடைடா மீது இன்று(20.11.2026) தாக்குதல் நடத்தியதாகக் கூறியுள்ளது.
இதற்கிடையில் குறித்த கூட்டணி சவூதி வான்வெளியைத் தவிர்க்குமாறு விமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்ததோடு, சில மணி நேரங்களுக்குள் புதிய வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் உறுதியளித்துள்ளனர்.
வரவிருக்கும் மணிநேரங்கள்
ஹூதி கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு யேமனுக்கு உணவு மற்றும் இதர பொருட்களைக் கொண்டு வரும் முக்கிய துறைமுகம் ஹொடைடா ஆகும்.
கடத்தல் நடவடிக்கைகள் மற்றும் ஆயுதங்கள், பாலிஸ்டிக் ஏவுகணைகளின் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட துறைமுகத்தின் செயல்பாட்டுத் திறன்களை அழித்துவிட்டதாக சவூதி தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளது.

துறைமுகம் முழுமையாகச் செயல்பட்டு வருவதாகவும், பொருட்களின் போக்குவரத்து தொடரும் என்றும் யேமனின் தகவல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சவூதி துறைமுகங்களில் இருந்து கப்பல் நிறுவனங்களை வெளியேறுமாறு ஹூதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
வரவிருக்கும் மணிநேரங்களில் எங்கள் நடவடிக்கைகள் சவூதி வான்வெளியில்தான் நடைபெறும் என்பதால், விமான நிறுவனங்கள் சவூதி வான்வெளியைத் தவிர்க்க வேண்டும் என்று கூறிய ஹூதி இராணுவ செய்தித் தொடர்பாளர், முஸ்லிம்களின் புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனாவிற்கு அருகிலுள்ள வான்வெளிக்கு விதிவிலக்கு அளித்தார்.
கடந்த மாதம் ரியாத்தின் பிரதான விமான நிலையத்தில் நடந்த கொடூரமான தாக்குதல்களால் பெரும்பாலான சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், சவூதி அரேபியா கால்பந்தாட்டத்தின் ஏஎஃப்சி ஆசியக் கோப்பை உள்ளிட்ட முக்கிய உலகளாவிய நிகழ்வுகளை ஒத்திவைத்துள்ளது.
கோடீஸ்வரராக வேண்டியவர்... ரிஷி சுனக்குடன் பணியாற்ற Anthropic பங்குகளை விற்றுவிட்ட பிரித்தானியர் News Lankasri