ஐரோப்பாவில் உள்ள அமெரிக்கத் தளங்களும் இலக்காகலாம்! ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் எச்சரிக்கை
அமெரிக்காவின் ஐரோப்பிய இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தும் திறன் ஈரானுக்கு இருப்பதாக,ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை எச்சரித்துள்ளது.
ஈரானின் ஏவுகணைகள் 4,500 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டவை என IRGC பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் ஹொசைன் மொஹெப்பி தெரிவித்துள்ளார்.
ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா ஹொசைனி கமேனியின் உத்தரவு கிடைத்தால், புவியியல் எல்லைகளின்றி இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா தாக்குதல்
அத்துடன்,ஈரானின் அணைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அதற்குப் பதிலடி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

வேறு நாடுகளின் இராணுவத் தளங்களைப் பயன்படுத்தி அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தினால், அந்த நாடுகளும் ஈரானின் இலக்குகளாக மாறும் என ஜெனரல் ஹொசைன் மொஹெப்பி எச்சரித்துள்ளார்.
இதேவேளை, CNN முன்வைத்த அழுக்கு குண்டு (Dirty Bomb) தொடர்பான குற்றச்சாட்டுகளை பொய்யானவை என ஈரான் மறுத்துள்ளது.
கனடாவின் Most Wanted பட்டியலில் முதலிடம் - கோல்டி பிராரை பிடிக்க ரூ.1.6 கோடி பரிசு அறிவிப்பு News Lankasri
நிகழ்ச்சியில் மிஷ்கின் என்னை தவறாக தொட்டாரா?... சர்ச்சைக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம் Cineulagam