யாழ். மாணவர்களுக்கு சர்வதேச உயர்கல்வி வாய்ப்பு! கைகோர்க்கும் இரு முக்கிய பல்கலைக்கழகங்கள்
யாழ்ப்பாண மாணவர்களுக்குப் புதிய சர்வதேச உயர்கல்வி வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், பிரித்தானியாவின் புகழ்பெற்ற University of Leicester மற்றும் NORTHERN UNI ஆகியன இணைந்து வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கைச்சாத்திடவுள்ளன.
இதற்கமைய, University of Leicesterஇன் தலைவரும் துணைவேந்தருமான பேராசிரியர் சர் நிஷான் கனகராஜா, எதிர்வரும் நவம்பர் 23, 2026 அன்று யாழ்ப்பாணத்திலுள்ள NORTHERN UNIக்கு நேரடியாக வருகை தந்து இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளார்.
இரு பல்கலைக்கழகங்களுக்கும் இடையே கல்வி சார்ந்த ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இந்த ஒப்பந்தம் முக்கிய அடித்தளமாக அமையவுள்ளது.
முன்னதாக, பிரித்தானியாவிலுள்ள University of Leicesterஇல் பேராசிரியர் சர் நிஷான் கனகராஜாவுக்கும், NORTHERN UNI-யின் நிறுவனரும் தலைவருமான இந்திரகுமார் பத்மநாதனுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றிருந்தது.
மாணவர்களுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு
NORTHERN UNI-யின் இயக்குநர் ரம்பா இந்திரகுமாரும் உடனிருந்த இச்சந்திப்பில், இரு பல்கலைக்கழகங்களின் கல்வித் திறன்களையும் எதிர்கால இலக்குகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் புதிய கற்கை நெறிகளை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

முன்மொழியப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் கீழ், செயற்கை நுண்ணறிவுடன் கூடிய கணினி அறிவியல் பொறியியல் பட்டப்படிப்பு (BEng Computer Science with Artificial Intelligence) மற்றும் வணிகம் மற்றும் மேலாண்மை இளங்கலைப் பட்டப்படிப்பு (BBA in Business and Management) உள்ளிட்ட சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கற்கை நெறிகளை வழங்க இரு பல்கலைக்கழகங்களும் இணைந்து செயற்படவுள்ளன.
இதன் மூலம் யாழ்ப்பாண மாணவர்கள் தமது சொந்த மண்ணிலிருந்தபடியே உலகளாவிய கல்விச் சூழலுடன் இணைந்து சர்வதேச தரத்திலான உயர்கல்வியைப் பெறுவதற்கான அரிய வாய்ப்பு உருவாகியுள்ளது.
மேலும், எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்தில் மருத்துவக் கல்லூரி ஒன்றை நிறுவுவதற்கான வாய்ப்புகள் மற்றும் விண்வெளி அறிவியல் துறையில் இணைந்து செயற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இரு பல்கலைக்கழகங்களும் ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தனிநபர்களினால் வங்கி கணக்குகளில் குவிக்கப்படும் பணம்! அஸ்வெசும திட்டத்தில் கட்டாயப்படுத்தப்படும் நடைமுறை
கனடாவின் Most Wanted பட்டியலில் முதலிடம் - கோல்டி பிராரை பிடிக்க ரூ.1.6 கோடி பரிசு அறிவிப்பு News Lankasri
நிகழ்ச்சியில் மிஷ்கின் என்னை தவறாக தொட்டாரா?... சர்ச்சைக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம் Cineulagam