திடீர் மூச்சுத்திணறல்.. 36 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
மஸ்கெலியா புனித ஜோசப் தேசியக் கல்லூரியைச் சேர்ந்த 36 மாணவர்கள் வரையில் இன்று (20) திடீர் மூச்சுத் திணறல் காரணமாக மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலையின் ஆரம்பப் பிரிவைச் சேர்ந்த 96 மாணவர்கள் காலை 8.45 மணியளவில் காலை உணவை உட்கொண்ட பின்னர் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிகப்படுகின்றது.
30 மாணவர்கள் வெளியேற்றம்
மாணவர்கள் தங்கள் வகுப்பறைகளில் இருந்தபோது, அவர்களில் சுமார் 36 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

30 மாணவர்கள் சிகிச்சை பெற்று வெளியேறியதாகவும், இரண்டு மாணவர்களும் 3 மாணவிகளும் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திடீர் மூச்சுத் திணறலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என கூறப்படுகின்றது.
நிகழ்ச்சியில் மிஷ்கின் என்னை தவறாக தொட்டாரா?... சர்ச்சைக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம் Cineulagam