இதுதான் இறுதித் திகதி! வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு
2025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்குகளைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நினைவூட்டியுள்ளது.
இதற்கமைய, 2025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 2026 நவம்பர் 30ஆம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதித் திகதி
நிறுவன வருமான வரி (CIT), கூட்டாண்மை வருமான வரி (PIT) மற்றும் தனிநபர் வருமான வரி (IIT) ஆகியவற்றுக்கான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பது தொடர்பிலேயே இந்த நினைவூட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த இறுதித் திகதிக்கு முன்னர் தமது வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு வரி செலுத்துவோரிடம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

தாமதமாக வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதைத் தவிர்த்து, அபராதங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.