லிமினியின் புதிய அவதாரம்..! நாமலின் முக்கிய சாட்சியை அழைப்பதில் சிக்கல்
நாமல் ராஜபக்ச வழக்கில் முக்கிய சாட்சியாக அடையாளம் காணப்பட்ட நபர் இந்தியாவில் இருப்பதாகவும், அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எயார்பஸ் மற்றும் கிரிஷ் ஒப்பந்தம் உள்ளிட்ட வழக்குகளில் சிறைச்சாலையில் தவித்து வரும் நாமல் ராஜபக்சவுக்குப் பதிலாகக் கட்சியை வழிநடத்துவதற்கு நாமலின் மனைவி லிமினி ராஜபக்ச அரசியல் களத்தில் இறங்கவுள்ளதாக இன்று காலை முதல் சில பதிவுகள் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன.
அதேவேளை, கட்சியின் உறுப்பினர் ஒருவர், “நாமல் வெளியில் வருவதற்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார்” எனச் சவால் விடுக்கும் வகையில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இவையெல்லாம் ஒருபுறம் சென்றுகொண்டிருக்கையில், தந்தை, மகன் உள்ளிட்ட கும்பல் ஒன்று எரிவாயு சிலிண்டர்களின் நிறத்தை மாற்றி, அவற்றைப் பொதுமக்களுக்கு விநியோகித்து வந்துள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதிகாரிகளால் பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று இன்றைய தினம் நாட்டில் இடம்பெற்ற சுவாரஸ்யமான விடயங்களை உங்கள் பார்வைக்குக் கொண்டுவருகின்றது, “நாட்டு நடப்பு” நிகழ்ச்சி,