அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல்களில் 623 சிறுவர்கள் பலி..! ஈரான் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதல்களில் 623 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக ஈரான் ஜனாதிபதியின் பெண்கள் மற்றும் குடும்ப விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் ஸஹ்ரா பெஹ்ரூஸ்-ஆசார் தெரிவித்துள்ளார்.
சிறுவர் தின நிகழ்வொன்றில் உரையாற்றும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
623 சிறுவர்கள் உயிரிழப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயிரிழந்தவர்களில் மினாப் நகரிலுள்ள ஷஜரே தய்யிபா மற்றும் ரஹ்பூயான் பாடசாலை மாணவர்களும் அடங்குவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், பல சிறுவர்கள் காயமடைந்துள்ளதாகவும், பொருளாதாரத் தடைகள் காரணமாக அரிய மற்றும் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்குத் தேவையான மருந்துகளைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உள்நாட்டு மருந்து உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களும் அத்தியாவசிய மருந்துகளின் உற்பத்தி மற்றும் விநியோகத்தைப் பாதித்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.