மாவீரர் வாரம் ஆரம்பம்! பல பகுதிகளில் அஞ்சலி நிகழ்வு முன்னெடுப்பு

Sri Lankan Tamils Tamils Jaffna Sri Lanka
By Rakesh Nov 22, 2026 12:22 PM GMT
Report

கோப்பாய் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவிடத்தில் இன்று மாலை 5.30 மணிக்கு மாவீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தி, நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது. 

பதினாறாம் இணைப்பு

மன்னார் மாவட்ட மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஒழுங்கமைப்பில் மாந்தை மேற்கு, மன்னார் நகர் பிரதேசத்தைச் சேர்ந்த 55 கிராமங்களில் இருந்து 500 க்கு மேற்பட்ட பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (21) மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

பேரெழுச்சியுடன் நடந்த இப்புனித நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோணி பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்கள் சிறப்பாக வருகை தந்து மாவீரர்களின் பெற்றோர்களை வரவேற்கும் நிகழ்வில் பங்கேற்று, பொது படத்திற்கு மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தி ஆசியுரை வழங்கி மதிப்பளித்தார்.

பொதுச் சுடரினை மாவீரர் வசீகரன் அவர்களின் தாயார்  சி.அன்ன ரோஸ் சில்வா ஏற்றினார்.

மாவீரர் வாரம் ஆரம்பம்! பல பகுதிகளில் அஞ்சலி நிகழ்வு முன்னெடுப்பு | Tribute Lighting A Lamp First Maaveerar

மாவீரர் வாரம் ஆரம்பம்! பல பகுதிகளில் அஞ்சலி நிகழ்வு முன்னெடுப்பு | Tribute Lighting A Lamp First Maaveerar

பதினைந்தாம் இணைப்பு

மாவீரர் வாரத்தை முன்னிட்டுப் பருத்தித்துறை - சுப்பர்மடத்தில் நேற்று சனிக்கிழமை இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டது.

சுப்பர்மடம் வாழ் மக்களின் ஏற்பாட்டில் சுப்பர்மடம் பொதுநோக்கு மண்டபத்தில் இந்த இரத்ததான முகாம் நடைபெற்றது.

பருத்தித்துறை இரத்த வங்கியில் நிலவும் குருதித்தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் பலர் ஆர்வமுடன் பங்கேற்றுக் குருதிக் கொடை வழங்கினர். 

மாவீரர் வாரம் ஆரம்பம்! பல பகுதிகளில் அஞ்சலி நிகழ்வு முன்னெடுப்பு | Tribute Lighting A Lamp First Maaveerar

செய்தி - ராகேஷ்

பதினான்காம் இணைப்பு

தமிழ்த் தேசிய மாவீரர் வாரத்தின் முதலாவது நாளாகிய நேற்று (21.11.2026) வல்வெட்டித்துறை - கம்பர்மலை சந்தியில் அமைந்துள்ள மாவீரர் நினைவாலயத்தில் உணர்வுபூர்வமான அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

வல்வெட்டித்துறை - உடுப்பிட்டி பிரதான வீதியில் கம்பர்மலை சந்தியில் உள்ள மாவீரர் நினைவாலயத்தில் சுடரேற்றி, மலர் தூவி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாவீரர் வாரம் ஆரம்பம்! பல பகுதிகளில் அஞ்சலி நிகழ்வு முன்னெடுப்பு | Tribute Lighting A Lamp First Maaveerar

செய்தி - ராகேஷ்

பதின்மூன்றாம் இணைப்பு

மாவீரர்களின் பெற்றோர்களையும் அவர்களின் குடும்பங்களையும் வெறுமனே நிகழ்வுகளில் அழைத்து மாலை அணிவித்து வார்த்தைகளால் கௌரவிப்பதோடு மட்டும் நமது கடமை முடிந்துவிடுவதில்லை. வயோதிபத்திலும், தனிமையிலும், வாழ்வாதார நெருக்கடிகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தப் பெற்றோர்களையும் அவர்களின் குடும்பங்களையும் நிச்சயமாகத் தூக்கி நிறுத்த வேண்டிய பொறுப்பும், அவர்களைத் தாங்கிப் பிடிக்க வேண்டிய கடமையும் நம் அனைவருக்கும் உண்டு என கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை லூக் அடிகளார் தெரிவித்தார்.

மாவீரர் வாரம் ஆரம்பம்! பல பகுதிகளில் அஞ்சலி நிகழ்வு முன்னெடுப்பு | Tribute Lighting A Lamp First Maaveerar

செய்தி - குமார்

பன்னிரெண்டாம் இணைப்பு

​மாவீரர் வாரத்தை முன்னிட்டு, வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயம் நேற்று (21) உணர்வுபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. ​

வவுனியா, மன்னார் வீதியில் அமைந்துள்ள கலைமகள் விளையாட்டு மைதானத்தில் இந்த நினைவாலயத் திறப்பு விழா நடைபெற்றது.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்ப்பலகைகள் தாங்கியவாறு குறித்த நினைவாலயம் அமைக்கப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காகத் திறந்து விடப்பட்டுள்ளது.

மாவீரர் வாரம் ஆரம்பம்! பல பகுதிகளில் அஞ்சலி நிகழ்வு முன்னெடுப்பு | Tribute Lighting A Lamp First Maaveerar

செய்தி - திலீபன்

பதினொராம் இணைப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட “தாயகம்” அலுவலகத்தில் மாவீரர் நினைவேந்தல் வார அனுஸ்டிப்பு நிகழ்வின் முதல்நாள் ஆரம்ப நிகழ்வு நேற்று (21.11.2026) உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

இதில் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன், வவுனியா மாநகர முதல்வர் சு.காண்டீபன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் பா.பாலேந்திரன், கட்சியின் வவுனியா மாவட்டக்கிளையினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மலர்தூவி, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

மாவீரர் வாரம் ஆரம்பம்! பல பகுதிகளில் அஞ்சலி நிகழ்வு முன்னெடுப்பு | Tribute Lighting A Lamp First Maaveerar

செய்தி - திலீபன்

பத்தாம் இணைப்பு

யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக உள்ள பகுதிகளில் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக நேற்று (21.11.2026) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.

மாவீரர்களின் பெற்றோர் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் இன்று இரவு 7 மணியளவில் கல்வெட்டுக்கள் அடங்கிய நினைவாலயம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

குறித்த நினைவாலயம் நவம்பர் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

மாவீரர் வாரம் ஆரம்பம்! பல பகுதிகளில் அஞ்சலி நிகழ்வு முன்னெடுப்பு | Tribute Lighting A Lamp First Maaveerar

மாவீரர் வாரம் ஆரம்பம்! பல பகுதிகளில் அஞ்சலி நிகழ்வு முன்னெடுப்பு | Tribute Lighting A Lamp First Maaveerar

செய்தி - தீபன்

ஒன்பதாம் இணைப்பு

யாழ். வலிகாமம் வடக்கு தெல்லிப்பழைச் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயத்தில் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (21) மாலை ஆரம்பமானது.

இதன்போது மாவீரர் ஒருவரின் தாயார் பொதுச்சுடரை ஏற்றி வைத்தார்.

நினைவாலயத்தில் நினைவேந்தலுக்காக வைக்கப்பட்டிருந்த, விடுதலைக்காக வித்தானவர்களின் நினைவுப் படங்களுக்குச் சுடரேற்றியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நினைவேந்தலில் வலி வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

செய்தி - தீபன்

எட்டாம் இணைப்பு

இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் நெல்லியடி நகரிலும் நேற்று (21.11.2026) பிற்பகல் 6 மணியளவில் மாவரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாவீரரின் பெற்றோர் பொது ஈகை சுடரை ஏற்றி வைத்ததனை தொடர்ந்து மாவீரர்களுக்காகவும் அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து மலர் மாலையினை மாவீரர் ஒருவரின் பெற்றோர் அணிவித்ததை தொடர்ந்து நினைவேந்தலில் கலந்துகொண்ட அனைவரும் மலர் அஞ்சலி செலுத்தினர்.

செய்தி - எரிமலை

ஏழாம் இணைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு கிழக்கு மற்றும் மேற்கு கிராமங்களைச் சேர்ந்த 180 மாவீரர் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (21.11.2026) விசுவமடு தொட்டியடி லாறா ரஞ்சன் விளையாட்டு மைதானத்தில் விசுவமடு கிழக்கு மேற்கு கிராம மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு பணிக்குழுவின் ஏற்பாட்டில், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வேலாயுதம் கரிகாலன் தலைமையில் உணர்வு பூர்வமாக இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது மாவீரர்களின் பெற்றோர்கள் மாலை அணிவிக்கப்பட்டு, மங்கள வாத்திய இசையுடன் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்திற்கு அழைத்து வரப்பட்டதனை தொடர்ந்து, இரண்டு மாவீரர்களை ஈகம் செய்த பெற்றோரான கந்தசாமி சாராதேவி பொதுச்சுடரினை ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து, மூன்று மாவீரர்களின் தாயாரான கோவிந்தசாமி லட்சுமி அம்மா மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தனைத் தொடர்ந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாவீரர் வாரம் ஆரம்பம்! பல பகுதிகளில் அஞ்சலி நிகழ்வு முன்னெடுப்பு | Tribute Lighting A Lamp First Maaveerar

மாவீரர் வாரம் ஆரம்பம்! பல பகுதிகளில் அஞ்சலி நிகழ்வு முன்னெடுப்பு | Tribute Lighting A Lamp First Maaveerar

செய்தி - ஷான்

ஆறாம் இணைப்பு

தமிழ் தேசிய மாவீரர் நாளானது எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில் மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு பல்வேறு இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையிலே கிளிநொச்சி கோணாவில் பிரதேசத்திற்கான மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு யூணியங்குளம் வான தாரகை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுள்ளது.

மாவீரர் வாரம் ஆரம்பம்! பல பகுதிகளில் அஞ்சலி நிகழ்வு முன்னெடுப்பு | Tribute Lighting A Lamp First Maaveerar

மாவீரர் வாரம் ஆரம்பம்! பல பகுதிகளில் அஞ்சலி நிகழ்வு முன்னெடுப்பு | Tribute Lighting A Lamp First Maaveerar

செய்தி - சுடரோன்

ஐந்தாம் இணைப்பு

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவு வளாகம் நேற்று (21.11.2026) காலை திறந்து வைக்கப்பட்டது.

வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கு முன்பாக அமைந்துள்ள இந்த நினைவு வளாகத்தை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் சுடரை ஏற்றி வைத்துத் திறந்து வைத்தார்.

மாவீரர் வாரத்தின் தொடக்க நாளான இன்று இடம்பெற்ற இந்நிகழ்வில், வலிகாமம் தெற்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராசா பிரகாஷ், பிரதேச சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது அஞ்சலியைச் செலுத்தினர். 

செய்தி - தீபன்

நான்காம் இணைப்பு

திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேசத்தைச் சேர்ந்த மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு வெருகல் கலாசார மண்டபத்தில் நேற்று (21.11.2026) இடம்பெற்றது.

இதன்போது வெருகல் பகுதியைச் சேர்ந்த 150 மாவீரர் பெற்றோர் மேள தாளங்களுடன் விழா மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு கௌரவமளிக்கப்பட்டனர்.

இதன் பின்னர் மாவீரர்களுக்கு மதிப்பளிக்கு வகையில் தீபச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாவீரர் வாரம் ஆரம்பம்! பல பகுதிகளில் அஞ்சலி நிகழ்வு முன்னெடுப்பு | Tribute Lighting A Lamp First Maaveerar

செய்தி - கியாஸ் ஷாபி

மூன்றாம் இணைப்பு

கிளிநொச்சி - முரசுமோட்டையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு நேற்று (21-11-2026) நடைபெற்றுள்ளது.

தமிழ் தேசிய மாவீரர் நாளானது எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில் மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கின்ற நிகழ்வு பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையிலே கிளிநொச்சி - முரசுமோட்டை பிரதேசத்திற்கான மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

செய்தி - சுடரோன்

இரண்டாம் இணைப்பு

மாவீரர் நாளை முன்னிட்டு மாவீரர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (21) மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவு கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது கார்த்திகை பூ பொது சின்னத்தை கொண்ட புகைப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர் போதகர் எஸ். லூக் ஜோன் கட்சி மாவட்ட அமைப்பாளர் கணபதிப்பிள்ளை குககுமரராஜா உட்பட கட்சி ஆதரவாளர்கள் மாவீரர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

இதன்போது மகிழடித்தீவு சந்தியில் இருந்து மாவீரர்களின் பெற்றோர்கள் கார்த்திகை பூ பொது சின்னத்தை கொண்ட புகைப்படத்தை தாங்கியவாறு மேள தாளத்துடன் அணிவகுத்து நடைபவணியாக கலாச்சார மண்டபம் வரை சென்று பொது சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து மலர் தூவி சுடர் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.

மாவீரர் வாரம் ஆரம்பம்! பல பகுதிகளில் அஞ்சலி நிகழ்வு முன்னெடுப்பு | Tribute Lighting A Lamp First Maaveerar

மாவீரர் வாரம் ஆரம்பம்! பல பகுதிகளில் அஞ்சலி நிகழ்வு முன்னெடுப்பு | Tribute Lighting A Lamp First Maaveerar

செய்தி - பவன்

முதலாம் இணைப்பு

தமிழ்த் தேசிய மாவீரர் வாரத்தின் முதலாவது நாளாகிய நேற்று (21.11.206) காலை, முதல் மாவீரர் லெப்டினன்ட் சங்கரின் இல்லத்தில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

வல்வெட்டித்துறையில் உள்ள மாவீரர் சங்கரின் வீட்டின் முன்பாகச் சுடரேற்றி, மலர் தூவி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாவீரர் வாரம் ஆரம்பம்! பல பகுதிகளில் அஞ்சலி நிகழ்வு முன்னெடுப்பு | Tribute Lighting A Lamp First Maaveerar

தமிழ்த் தேசியக் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினரும் வடமராட்சி அமைப்பாளருமான வி.கவிச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவீரர் பண்டிதரின் தாயார் மகேஸ்வரி அம்மா மாவீரர் நினைவுச் சுடரை ஏற்றிவைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து, வல்வெட்டித்துறை பதில் நகரபிதா நா. பத்மநாதன் மற்றும் நகர சபை உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மாவீரர் வாரம் ஆரம்பம்! பல பகுதிகளில் அஞ்சலி நிகழ்வு முன்னெடுப்பு | Tribute Lighting A Lamp First Maaveerar

மறைந்த சிரேஷ்ட அரசியல்வாதி எம்.கே. சிவாஜிலிங்கத்தின் தலைமையில் மாவீரர் வாரத்தின் முதலாவது நாளில் முதல் மாவீரர் சங்கரின் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாவீரர் வாரம் ஆரம்பம்! பல பகுதிகளில் அஞ்சலி நிகழ்வு முன்னெடுப்பு | Tribute Lighting A Lamp First Maaveerar

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, தலையாழி, Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US