8 ஆண்டுகளுக்குப் பின்னும் ஓயாத சர்ச்சை! வர்ணனையிலிருந்து நீக்கப்பட்ட இரு அவுஸ்திரேலிய வீரர்கள்
2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அடுத்து, அவுஸ்திரேலிய முன்னாள் வீரர்களான உஸ்மான் கவாஜா மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி வர்ணனையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.
பந்தை சேதப்படுத்திய விவகாரம்
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முழுவதும் கவாஜா, வோர்னர் இருவரும் வர்ணனையில் பங்கேற்க மாட்டார்கள்.

இருவரும் மீண்டும் எப்போது வர்ணனைக்குத் திரும்புவார்கள் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.
முன்னதாக, கவாஜா தனது சுயசரிதையில், பந்தை சேதப்படுத்தும் திட்டம் குறித்து அப்போதைய அணியினர் அனைவருக்கும் தெரிந்திருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
மீண்டும் சர்ச்சை
வோர்னரும் கவாஜாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.பின்னர் கேமரூன் பான்கிராஃப்ட்டும் இதுகுறித்துப் பேசியிருந்தார்.

இதற்கிடையில், அவுஸ்திரேலிய அணித்தலைவர் பாட் கம்மின்ஸ் தனக்கு இந்தச் சம்பவம் குறித்து எதுவும் தெரியாது என மறுத்துள்ளார்.
இந்த நிலையில் கிரிக்கெட் அவுஸ்திரேலியா கம்மின்ஸுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளது.