தவிசாளருக்காக மக்கள் பணத்தில் வாடகை வாகனமா..! நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் விளக்கம்

Jaffna Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Theepan Nov 22, 2026 07:54 AM GMT
Report

நல்லூர் பிரதேசசபையின் நிர்வாகத் தேவைக்காக, புதிய வாகனமொன்றைக் கொள்வனவு செய்வதற்கான அனுமதியை மத்திய அரசாங்கத்திடம் கோரியிருந்தும் அதற்கான அனுமதி கிடைக்கப் பெறாதமையால், வாடகை அடிப்படையில் வாகனத்தை பெற உரிய நடைமுறைகளை பின்பற்றி நடவடிக்கை எடுத்ததாக, நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார்.

நல்லூர் பிரதேசசபையின் தவிசாளருக்காக மக்கள் பணத்தில் வாடகை வாகனம் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் , விளக்கமளிக்கும் முகமாக தவிசாளர் வெளியிட்டுள்ள அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், எமது சபையின் நிர்வாக மற்றும் செயற்பாட்டுத் தேவைகளைக் கருத்திற்கொண்டு, வாடகை அடிப்படையில் வாகனமொன்றை அமர்த்தியமை தொடர்பாக அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

விலைமனுக் கோரல் நடைமுறை

முதலில், இவ்விடயத்தில் ஒன்றைத் தெளிவாகக் கூற விரும்புகின்றேன். குறித்த தீர்மானமானது எவ்விதமான தன்னிச்சையான அல்லது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்டதல்ல. மாறாக, முறையான விலைமனுக் கோரல் நடைமுறைகளுக்கு அமைவாகவும், உரிய நிர்வாக ஒழுங்குவிதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றியுமே முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தவிசாளருக்காக மக்கள் பணத்தில் வாடகை வாகனமா..! நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் விளக்கம் | Chairman Of The Nallur Pradeshiya Sabha

அரசாங்கத்தின் நடைமுறையிலுள்ள சுற்றறிக்கைகளின் பிரகாரம், அரச நிறுவனங்கள் பொதுவாக ஐந்து வருடங்களுக்கு உட்பட்ட வாகனங்களையே கொள்வனவு செய்யக்கூடிய நிலை காணப்படுகின்றது.

எனினும், ஐந்து வருடங்களுக்கு உட்பட்ட புதிய வாகனமொன்றைக் கொள்வனவு செய்வது எமது சபைக்கு அதிகளவிலான நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்பதைக் கருத்திற்கொண்டு, பத்து வருடங்களுக்கு உட்பட்ட வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கான விசேட அனுமதியைப் பெற்றுக்கொள்ள நீண்டகாலமாக உரிய திணைக்களங்கள் ஊடாகப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம்.

இருப்பினும், அம் முயற்சிகளுக்கு எதிர்பார்த்த சாதகமான முடிவு கிடைக்கவில்லை. எமது சபையின் அன்றாட நிர்வாகச் செயற்பாடுகள், கள விஜயங்கள் மற்றும் அபிவிருத்திப் பணிகளைக் கண்காணித்தல் போன்ற அத்தியாவசியப் பணிகளின்போது எதிர்கொள்ளப்பட்ட நடைமுறைச் சிக்கல்களே இவ்வாறானதொரு வாகனத்தின் தேவையை உணர்த்தின.

கள விஜயங்களில் ஈடுபட வேண்டிய தேவை

குறிப்பாக, தவிசாளர், செயலாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பொறுப்புவாய்ந்த உத்தியோகத்தர்கள் ஒரே நேரத்தில் கள விஜயங்களில் ஈடுபட வேண்டிய தேவை காணப்படுகின்றது. ஆனால், எமது சபையின் தற்போதைய வாகனம் Single Cab வகையைச் சேர்ந்ததாக இருப்பதால், அனைவரும் ஒன்றாகப் பயணிப்பதில் பல்வேறு நடைமுறைச் சிரமங்கள் ஏற்பட்டன.

தவிசாளருக்காக மக்கள் பணத்தில் வாடகை வாகனமா..! நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் விளக்கம் | Chairman Of The Nallur Pradeshiya Sabha

இந்த நிர்வாகத் தேவையைக் கருத்திற்கொண்டு, புதிய வாகனமொன்றைக் கொள்வனவு செய்வதற்கான அனுமதியை மத்திய அரசாங்கத்திடம் கோரியிருந்தோம். எனினும், அதற்கான அனுமதி கிடைக்கப்பெறவில்லை. இந்நிலையில், மாற்று வழியாக, முறையான விலைமனுக் கோரல் நடைமுறைகளைப் பின்பற்றி, எமது சபையின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் வாகனமொன்றை வாடகை அடிப்படையில் அமர்த்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்தோம்.

மேலும், குறித்த வாகனத்திற்கான ஒப்பந்தத்தில் சாரதிச் சேவை, எரிபொருள் செலவு, வாகனப் பராமரிப்பு உள்ளிட்ட அத்தியாவசியச் செலவுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் உரிய நிர்வாக நடைமுறைகளுக்கு அமைவாகவே ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

எனவே, ஒரு விடயத்தின் முழுமையான பின்னணியையும் அதன் அவசியத்தையும் நிர்வாகத் தேவைகளையும் அறிந்துகொள்ளாமல், மேலோட்டமான தகவல்களின் அடிப்படையில் சமூக ஊடகங்களில் விமர்சனங்களை முன்வைப்பது ஆரோக்கியமான அணுகுமுறையல்ல. விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது ஜனநாயக உரிமையாக இருந்தாலும், அவை உண்மைகளையும் ஆதாரங்களையும் அடிப்படையாகக் கொண்டதாக அமைதல் வேண்டும்.

விமர்சனங்கள்

அதேவேளை, அண்மைக்காலமாக வெளிவரும் சில விமர்சனங்கள், ‘ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுததாம்’ என்ற பழமொழியையே எனக்கு நினைவூட்டுகின்றன. காலத்துக்குக் காலம் ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்களுக்கு அரசியல் ரீதியாகத் தம்மைச் சாதகமாக இணைத்துக்கொண்டு செயற்படுகின்ற சிலரின் மனக்குமுறல்களாகவே இவ்வாறான விமர்சனங்களில் சிலவற்றை நோக்க வேண்டியுள்ளது.

தவிசாளருக்காக மக்கள் பணத்தில் வாடகை வாகனமா..! நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் விளக்கம் | Chairman Of The Nallur Pradeshiya Sabha

அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தமது நிலைப்பாடுகளை மாற்றிக்கொண்டு, ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆட்சியாளர்களின் நிழலில் பயணிப்பவர்களின் விமர்சனங்களுக்காக, ஒரு நிறுவனத்தின் அத்தியாவசிய நிர்வாகத் தேவைகள் புறக்கணிக்கப்பட முடியாது. எமது அணுகுமுறை அரசியல் இலாபத்தை நோக்கமாகக் கொண்டதல்ல; மாறாக, மக்களுக்கான சேவையைத் தடையின்றி முன்னெடுப்பதற்கான நிர்வாகப் பொறுப்புணர்வை அடிப்படையாகக் கொண்டதாகும்.

ஒரு பொது நிறுவனத்தின் செயற்பாட்டுத் தேவைகளுக்காக மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை வெறுமனே அரசியல் கண்ணோட்டத்தில் மட்டும் அணுகாமல், அவற்றின் பின்னணியில் உள்ள நடைமுறைச் சவால்கள், நிர்வாகத் தேவைகள் மற்றும் பொதுமக்களுக்கான சேவை நோக்கம் ஆகியவற்றையும் புரிந்துகொள்வது அவசியமாகும். விமர்சனங்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சுவதில்லை.

ஆனால், உண்மைகளைத் திரித்துக் கூறுவதன் மூலமோ, நிர்வாகத் தீர்மானங்களை அரசியல் நோக்கில் மட்டும் சித்தரிப்பதன் மூலமோ பொதுமக்களைத் தவறாக வழிநடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எமது சபையின் வளங்களைப் பொறுப்புடனும் வெளிப்படைத்தன்மையுடனும் பயன்படுத்தி, மக்களுக்கான சேவைகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதே எமது நிலைப்பாடாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ். பல்கலை மாணவ குழுக்களுக்கிடையே வெடித்த மோதல்.. எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை

யாழ். பல்கலை மாணவ குழுக்களுக்கிடையே வெடித்த மோதல்.. எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை

அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள தகவல்

அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள தகவல்

13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US