வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் மாவீரர் வார நிகழ்வுகள் ஆரம்பம்
வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் தமிழ்த் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு நேற்று(21.11.2026)ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தீருவில் சதுக்கத்தில் உடைக்கப்பட்ட நிலையில் உள்ள குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட பன்னிருவரின் நினைவுத் தூபிச் சிதைவுகளுக்கு மத்தியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
சிரமதானப் பணிகள்
தமிழ்த் மாவீரர் நாள் நிகழ்வு வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் வருடா வருடம் மிகவும் எழுச்சிபூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மாவீரர் வாரம் நேற்று சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், தீருவில் சதுக்கத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்போது, தீருவில் சதுக்கப் பகுதி துப்பரவு செய்யப்பட்டு, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறக் கொடிகள் கட்டப்பட்டு மாவீரர் நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
வரும் நவம்பர் 27ஆம் திகதி மாலை வழமை போன்று தீருவில் சதுக்கத்தில் மாவீரர் நாள் நிகழ்வு மிகவும் எழுச்சியுடன் முன்னெடுக்கப்படவுள்ளது.


