இந்தோனேசியாவுக்கு அருகில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி அச்சுறுத்தல் தொடர்பில் இலங்கைக்கு முக்கிய அறிவுறுத்தல்
இந்தோனேசியாவின் மலுக்கு தீவுகளுக்கு அருகிலுள்ள பண்டா கடற்பகுதியில் இன்று (21) 6.8 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை நேரப்படி பிற்பகல் 3.12 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதுடன், இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.
முக்கிய அறிவுறுத்தல்
அதன்படி, நாட்டின் அனைத்து கடலோரப் பகுதிகளும் பாதுகாப்பாக உள்ளதாகவும், கரையோர மக்கள் அச்சமடையத் தேவையில்லை என அந்த மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

கிழக்கு திமோரின் தலைநகரான டிலி நகரிலிருந்து வடகிழக்கே சுமார் 226 கிலோமீற்றர் தொலைவில் பண்டா கடற்பகுதியில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
கடலுக்கு அடியில் சுமார் 117 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்றும் கூறப்படுகின்றது.
