இலங்கையர்களுக்கு விசா இன்றி தாய்லாந்து செல்ல வாய்ப்பு - கைச்சாத்தானது முக்கிய ஒப்பந்தம்
இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையில் சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் விசா இன்றி பயணம் செய்வதற்கான விசா விலக்கு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் பிரதி பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சிஹாசக் பூவாங் கெட்கியோ (Sihasak Phuangketkeow) இலங்கைக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் பொழுதே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசா விலக்கு ஒப்பந்தம்
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தாய்லாந்து வெளிவிவகார அமைச்சருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் இன்று(22.11.2026) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, குறித்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான பயணங்களை இலகுபடுத்துவதுடன், மக்களுக்கு இடையிலான உறவுகளையும் வலுப்படுத்தும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், வர்த்தகம், முதலீடு, சுற்றுலாத்துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விவசாயம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதில் இந்த ஒப்பந்தம் ஒரு முக்கிய மைல்கல் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இந்த விசா விலக்கு ஒப்பந்தத்திற்கு இரு நாடுகளின் அமைச்சரவைகளும் ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உயிருக்கு ஆபத்தான ஏர்பேக் கோளாறு..! வாகனங்களை மீளப்பெறுவதாக ஹோண்டா மற்றும் டொயோட்டா அதிரடி அறிவிப்பு