ரஷ்ய சரக்குக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்- பால்டிக் கடலில் தீ விபத்து
ரஷ்யாவுக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் பால்டிக் கடலில் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகி தீப்பிடித்துள்ளது.
உக்ரைன் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என பின்லாந்து ராணுவ அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
கப்பலில் இருந்த 16 பணியாளர்களும் உயிர்காக்கும் படகுகள் மூலம் வெளியேற்றப்பட்டு, அருகிலிருந்த மற்றொரு ரஷ்யக் கப்பலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தீ விபத்து
தீப்பிடித்த கப்பல் பின்னர் பின்லாந்து கடல் எல்லைக்குள் மிதந்து வந்ததால், மீட்புப் பணிகளை பின்லாந்து முன்னெடுத்துள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து கிழக்கு பின்லாந்து வளைகுடா பகுதியில் தற்காலிக விமான மற்றும் கடல் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மீட்புப் பணியின்போது ரஷ்ய ஹெலிகாப்டர் ஒன்று பின்லாந்து வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணி
அத்துடன், ஸ்வீடன் போர் விமானங்களும், எஸ்டோனியக் கடற்படைக் கப்பலும் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகளில் உதவியுள்ளன.
தாக்குதலுக்கு உள்ளான ஸ்பார்ட II கப்பல் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு உட்பட்டது.இது ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு தளவாட சேவைகளை வழங்கும் Oboronlogistika நிறுவனத்துடன் தொடர்புடையது.

கப்பலில் ராணுவப் பொருட்கள் இருந்திருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan
Bigg Boss 10: டிடிஎஃப்-ற்கு எதிராக முனியம்மா போட்ட முகமூடி... வெளியேறும் இரண்டு போட்டியாளர்கள் Manithan