இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: காசாவில் எரிபொருள் தட்டுப்பாடு
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் காரணம் காட்டி, இஸ்ரேல் தனது அனைத்து எல்லைகளையும் மூடியுள்ளது.
இதன் காரணமாக காசா பகுதிக்கு வரும் அத்தியாவசியப் பொருட்களின் வரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு, அங்கு கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மின் உற்பத்தி நிலையங்கள்
ஏற்கனவே மனிதாபிமான நெருக்கடியில் சிக்கியுள்ள காசா மக்கள், தற்போது சமையல் எரிவாயு மற்றும் வாகனங்களுக்கான எரிபொருள் கிடைக்காமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

எல்லைகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து, காசாவில் உள்ள சந்தைகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 130 ஷெக்கல்கள் (இஸ்ரேலிய நாணயம்) வரை விற்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் மீதான இராணுவ நடவடிக்கையில் உலக நாடுகளின் கவனம் திரும்பியுள்ள நிலையில், காசாவின் இந்த அவலநிலை மீண்டும் ஒரு பஞ்சத்திற்கு வழிவகுக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளதாக உலக உணவுத் திட்டம் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam