இலங்கை ராணுவம் இறுதிக்கட்ட போரில் பல நாடுகளின் உதவியை பெற்றே வெற்றியை கண்டது: வைகோ(Video)
இலங்கையின் இறுதிக்கட்ட போரில் பல நாடுகளின் உதவியால் மட்டுமே தமிழீழ விடுதலை புலிகளை இலங்கை ராணுவத்தால் வெற்றிகொள்ள முடிந்தது என ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் - ராமேஸ்வரத்திற்கு அடுத்துள்ள பாம்பனில் இன்று(29) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டே இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிப்பதாவது,
ராஜபக்ச குடும்பத்தினர்
இலங்கையின் இறுதிக்கட்ட போரின் போது தமிழ் மக்களை கொன்று குவித்த ராஜபக்ச குடும்பத்தினர் இப்போது உயிருக்கு பயந்து பல நாடுகளில் தஞ்சம் கோரி வருகின்றார்கள்.
சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ள கோட்டபய இந்தியாவிற்கு வர முயற்சி செய்வதாகவும் தெரிய வருகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றி பெற்றதாக சிங்கள அரசாங்கம் கொண்டாடியபோது இன்னும் சில ஆண்டுகளில் ராஜபக்ச குடும்பம் உயிரை காப்பாற்றி கொள்ள இலங்கையை விட்டு தப்பி செல்வார்கள் என நான் அன்று கூறியது இன்று நடந்துள்ளது.
கடற்தொழிலாளர்களின் பாதுகாப்பு
கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் தொடர்ந்து மூன்று முறை 30க்கும் மேற்பட்ட தமிழக கடற்தொழிலாளர்கள் சிங்கள கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதை தடுக்க வேண்டிய மத்திய அரசே வேடிக்கை பார்த்து வருகின்றது.
கடற்தொழிலாளர்களை பாதுகாக்கும் கடமை மத்திய அரசிடம் உள்ளது. ஆனால் அதனை மத்திய அரசு தவறவிட்டுள்ளது.இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு வாய்ப்பு இல்லாமல் உள்ளது.
எனவே கடற்தொழிலாளர்கள் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam
