புதிய 2000 ரூபா நாணயத்தாளால் ஏற்பட்டுள்ள சிக்கல்
புதிதாக வெளியிடப்பட்ட இரண்டாயிரம் ரூபா நாணயத்தாள் சில வங்கிகளின் தானியங்கி இயந்திரங்களால் நிராகரிக்கப்படுவதால் தாம் சிக்கலை எதிர்நோக்குவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஹட்டன் பகுதியில் சில அரச மற்றும் தனியார் வங்கிகளின் தானியங்கி இயந்திரங்களில் புதிய இரண்டாயிரம் ரூபா நாணயத்தாளை செலுத்தும் போது அந்த நாணயத்தாள்களை இயந்திரம் ஏற்க மறுப்பதாக பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
நிராகரிக்கப்படும் தாள்கள்
மேலும், சில தனியார் நிதி நிறுவனங்களில் பணத்தை வைப்புச் செய்யும் போது பணம் எண்ணும் இயந்திரங்களில் குறித்த தாள் நிராகரிக்கப்படும் சம்பவங்களும் பதிவாவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் பொது மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் கூறுகையில், பணம் எடுக்கும் மற்றும் வரவு வைக்கும் இயந்திரங்கள் மற்றும் பணத்தை எண்ணும் இயந்திரங்களில் புதிய 2000 ரூபா தாள்களைப் புதுப்பிக்கத் தவறியதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam