ஈரானின் இராணுவ பலம் 90% அழிப்பு: "எலிகளைப் போல பதுங்குகிறார்கள்" - அமெரிக்கா
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் காரணமாக, அந்நாட்டின் இராணுவத் திறன் மிக மோசமாகச் சிதைந்துள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான போர் நிலவரம் குறித்து ஊடகங்களிடம் அவர் பல்வேறு விடயங்களை தெரிவித்துள்ளார்.
ஈரானிய ஆட்சியாளர்கள் இப்போது அமெரிக்காவின் 'நட்சத்திரங்கள் மற்றும் கோடுகளையும்' (Stars and Stripes), இஸ்ரேலின் 'டேவிட் நட்சத்திரத்தையும்' (Star of David) மட்டுமே காண்பார்கள் எனவும், இதுவே அவர்களின் மிக மோசமான கனவு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் ஆயுத பலம் பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் புள்ளிவிபரத் தகவல்களுடன் தெரிவித்துள்ளார்.
ஈரானின் ஏவுகணை கையிருப்பு 90% குறைந்துள்ளது எனவும் ஒருமுறை மட்டும் தாக்கி அழிக்கும் தற்கொலைத் ட்ரோன்களின் (Attack Drones) எண்ணிக்கை நேற்று 95% வரை வீழ்ச்சியடைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
ஈரானால் இனி புதிய ஆயுதங்களை உற்பத்தி செய்யும் திறன் இல்லை என அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
ஈரானின் இராணுவத் தொழிற்சாலைகள், பாதுகாப்பு புத்தாக்க மையங்கள் மற்றும் உற்பத்தி நிலையங்கள் அனைத்தும் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் தலைவர்கள் தற்போது தங்களைக் காத்துக்கொள்ள நிலத்தடியில் பதுங்கியிருக்கிறார்கள். எலிகள் செய்வதைப் போலவே அவர்கள் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள் என அவர் காரசாரமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) ஈரான் முன்னெடுத்து வரும் அச்சுறுத்தல்களை அமெரிக்கா கையாண்டு வருவதாகவும், அது குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri