கிம் ஜொங் தாக்குதல் நடத்தும் அபாயம்! ட்ரம்பின் நடவடிக்கையால் தென்கொரியாவில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்

Donald Trump United States of America Kim Jong Un South Korea Middle East
By Sajithra Mar 13, 2026 12:55 PM GMT
Report

அமெரிக்கா, தனது ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பின் சில பகுதிகளை தென் கொரியாவிலிருந்து மத்திய கிழக்குக்கு மாற்றியமைத்துள்ள நிலையில், அதற்கு தென் கொரியா அதிருப்தி தெரிவித்துள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள சூழலில், அமெரிக்கா தனது Terminal High Altitude Area Defence (THAAD) எனப்படும் ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பின் சில பகுதிகளையும், பிற இராணுவ உபகரணங்களையும் தென் கொரியாவிலிருந்து மத்திய கிழக்கிற்கு மாற்றியுள்ளது.

வட கொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு எதிராக பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக தென் கொரியாவில் சுமார் 28,500 அமெரிக்க படையினர் மற்றும் பல்வேறு வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

ஈரானின் இராணுவ பலம் 90% அழிப்பு: "எலிகளைப் போல பதுங்குகிறார்கள்" - அமெரிக்கா

ஈரானின் இராணுவ பலம் 90% அழிப்பு: "எலிகளைப் போல பதுங்குகிறார்கள்" - அமெரிக்கா

திரும்ப பெறப்பட்ட அமெரிக்க படை

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு, Seongju என்ற தென் கொரிய கிராமத்தில் THAAD ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு நிறுவப்பட்டது.

கிம் ஜொங் தாக்குதல் நடத்தும் அபாயம்! ட்ரம்பின் நடவடிக்கையால் தென்கொரியாவில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் | Us Shifts Anti Missile South Korea Unhappy

அப்போது அந்த கிராமம், வட கொரியாவின் ஏவுகணை தாக்குதல்களுக்கு எதிரான முக்கிய பாதுகாப்பு மையமாக மாற்றப்பட்டது.

இவ்வமைப்பு தென் கொரியாவை பாதுகாப்பதற்காக நிறுவப்பட்டிருந்தாலும், அதன் ரேடார் அமைப்பு சீனா மற்றும் ரஷ்யாவின் பாதுகாப்பை பாதிக்கக்கூடும் என அவர்கள் குற்றச்சாட்டு முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது, அமெரிக்கா இந்த பாதுகாப்பு அமைப்பின் சில பகுதிகளை மாற்றியமைத்துள்ளதால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தென் கொரியாவின் பாதுகாப்பு குறித்து அளித்த உறுதிப்பாடுகள் குறித்தும் சந்தேகங்கள் எழுந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பாதுகாப்பு அச்சுறுத்தல் 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியூங், அமெரிக்க ஆயுதங்களை இவ்வாறு திரும்பப் பெறுவது குறித்து கவலை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிம் ஜொங் தாக்குதல் நடத்தும் அபாயம்! ட்ரம்பின் நடவடிக்கையால் தென்கொரியாவில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் | Us Shifts Anti Missile South Korea Unhappy

இந்த மாற்றம் நாட்டின் பாதுகாப்புத் திறனை குறைக்கும் அபாயம் உள்ளதாக தென் கொரிய செய்தித்தாள் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், “மாற்றியமைக்கப்பட்ட இந்த பாதுகாப்பு அமைப்புகள் தங்களது பணியை நிறைவு செய்ததும் விரைவாக மீண்டும் தென் கொரியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

அதேசமயம், வட கொரியாவை எதிர்கொள்ள நாட்டின் சொந்த பாதுகாப்புத் திறன்களையும் விரைவாக வலுப்படுத்த வேண்டும்” என அந்த செய்தித்தாள் சுட்டிக்காட்டியுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறை குறித்து ஏற்பட்ட அச்சம்.. அரசாங்கத்தின் அவசர நடவடிக்கை

எரிபொருள் பற்றாக்குறை குறித்து ஏற்பட்ட அச்சம்.. அரசாங்கத்தின் அவசர நடவடிக்கை

தீவிர தயார்நிலை.. 

இதுகுறித்து இராணுவ ஆய்வாளர் மற்றும் தென்கொரியாவின் Sangji பல்கலைக்கழக பேராசிரியர் Choi Gi-il கூறுகையில், “இந்த ஆயுதங்களை மாற்றியமைத்ததை வட கொரியா தவறாக புரிந்து கொண்டு, கூட்டணி நாடுகளின் பாதுகாப்பு நிலையை சோதிக்கும் வகையில் சிறிய அளவிலான தூண்டுதல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அபாயம் உள்ளது” என குறிப்பிட்டுள்ளார். 

கிம் ஜொங் தாக்குதல் நடத்தும் அபாயம்! ட்ரம்பின் நடவடிக்கையால் தென்கொரியாவில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் | Us Shifts Anti Missile South Korea Unhappy

இதற்கிடையில், வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன், கடந்த பெப்ரவரி மாதம் தனது நாட்டின் அணு ஆயுத களஞ்சியத்தை மேலும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தார்.

மேலும், தென் கொரியாவை “மிகவும் பகைமை கொண்ட எதிரி” எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதேவேளை, சமீபத்தில் ஒரு கடற்படை அழிப்பு கப்பலில் இருந்து ஏவுகணை சோதனையை அவர் கண்காணித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், அமெரிக்கா மேற்கொண்டுள்ள இந்த மாற்றம் தென் கொரியாவின் எதிரிகளைத் தடுக்கின்ற பாதுகாப்புத் திறனை பாதிக்காது என ஜனாதிபதி லீ ஜே மியூங் பொதுமக்களுக்கு உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகின்றது. 

ஈரானியர்களுக்கு இன்று காத்திருக்கும் பெரும் ஆபத்து! அமெரிக்க ஜனாதிபதியின் எச்சரிக்கையினால் மீண்டும் பதற்றம்

ஈரானியர்களுக்கு இன்று காத்திருக்கும் பெரும் ஆபத்து! அமெரிக்க ஜனாதிபதியின் எச்சரிக்கையினால் மீண்டும் பதற்றம்

நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US