இலங்கையிலிருந்து வெளியேறவுள்ள 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் - வெளியாகியுள்ள தகவல்
2026ஆம் ஆண்டில் சுமார் 310,000 இலங்கையர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் பணியமர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, குறித்த எண்ணிக்கையில் அதிகளவான தொழிலாளர்கள் அதாவது 77,500 பேர் குவைத் நாட்டிற்கு கோரப்பட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு 63,500 பேரும், கட்டாருக்கு 44,000 பேரும், சவுதி அரேபியாவிற்கு 31,000 பேரும் அனுப்பப்படவுள்ளனர்.
புரிந்துணர்வு ஒப்பந்த வேலைத்திட்டங்கள்
நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கீழ் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களின் ஊடாக, 2026ஆம் ஆண்டில் இஸ்ரேலுக்கு 15,000 பேரும், ஜப்பானுக்கு 12,500 பேரும், தென் கொரியாவிற்கு 6,000 பேரும் அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, 2025ஆம் ஆண்டில் 300,000 வேலைவாய்ப்புகள் இலக்கு வைக்கப்பட்ட போதிலும், அந்த இலக்கைத் தாண்டி 311,207 தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலம்பெயர் வருமானம்
2025ஆம் ஆண்டில் இலங்கைக்கு 8000 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான புலம்பெயர் வருமானம் கிடைத்துள்ளது.
இதேவேளை இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் மாத்திரம் இதுவரை 20,484 தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகச் சென்றுள்ளதாகப் பணியகம் மேலும் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
எதிரிகள் மரணத்தை ருசிப்பார்கள்... ட்ரம்பிற்கு ஈராக்கின் துணை இராணுவப் படை பகிரங்க எச்சரிக்கை News Lankasri
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam