பதற்றத்தினால் மூடப்பட்டுள்ள வான்வெளிகள்! விமான டிக்கெட்டுகள் குறித்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் அறிவிப்பு
மத்திய கிழக்கில் தற்போது நிலவும் நெருக்கடி காரணமாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் முன்னர் முன்பதிவு செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளின் விலையில் எந்த அதிகரிப்பும் மேற்கொள்ளப்படாது என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனிதா ருவான் கொடித்துவக்கு தெரிவித்துள்ளர்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஈரானியர்களுக்கு இன்று காத்திருக்கும் பெரும் ஆபத்து! அமெரிக்க ஜனாதிபதியின் எச்சரிக்கையினால் மீண்டும் பதற்றம்
மத்திய கிழக்கு நெருக்கடி
மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும்போது ஜெட் எரிபொருளின் விலையும் அதிகரித்துள்ளது.

உலகளவில் ஜெட் எரிபொருளின் விலை இரட்டிப்பாகிவிட்டதால், இது விமான டிக்கெட்டுகளின் விலையையும் பாதிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் முன்னர் முன்பதிவு செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளின் விலையில் எந்த அதிகரிப்பும் இருக்காது என்று அமைச்சர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சிலோன் எண்ணெய் நிறுவனத்திடமிருந்து குறுகிய காலத்திற்கு சலுகை விலையில் ஜெட் எரிபொருளைப் பெற்றதாகவும் , விமான டிக்கெட்டுகள் புதிதாக முன்பதிவு செய்யப்பட்டால், அந்த திகதியில் நிலவும் விலைக்கேற்ப முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மூடப்பட்டிருக்கும் வான்வெளிகள்
மத்திய கிழக்கில் தற்போது நிலவும் நெருக்கடி காரணமாக சில விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், மேலும் புதிய விமானங்களுக்கான தேவை உள்ளதாகவும், எனவே விமான நிறுவனங்கள் இந்த சூழ்நிலைகளை ஆராய்ந்து அதற்கேற்ப செயல்படுவதாகவும் விளக்கமளித்தார்.

மத்திய கிழக்கில் சில வான்வெளிகள் இன்னும் மூடப்பட்டிருப்பதால், விமானங்கள் சில இடங்களுக்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்றும், இதனால் எரிபொருள் செலவுகள் அதிகரித்துள்ளதாகவும் ஜனித ருவான் கொடித்துவக்கு கூறுகின்றார்.
விமான நிறுவனங்கள் இந்த சூழ்நிலைகளில் அதிகம் கவனம் செலுத்தியுள்ளதுடன், சில இடங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான மக்கள் சென்றாலும், அந்த விமானங்கள் திரும்பும்போது, பயணிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைின்றதாக தெரிவித்துள்ளார்.
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri