ஈரானின் ஆயிரக்கணக்கான இலக்குகள் தகர்ப்பு: அமெரிக்க இராணுவம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
ஈரான் மீதான 'ஒபரேஷன் எபிக் பியூரி' இராணுவ நடவடிக்கை தொடங்கிய கடந்த 12 நாட்களில், சுமார் 6,000 இலக்குகளைத் தாக்கி அழித்துள்ளதாக அமெரிக்க மையக் கட்டளைத் தலைமையகம் அறிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்த இராணுவ நடவடிக்கையில், ஈரானின் பாதுகாப்பு கட்டமைப்புகளைச் சிதைப்பதே நோக்கம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பதற்றத்தினால் மூடப்பட்டுள்ள வான்வெளிகள்! விமான டிக்கெட்டுகள் குறித்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் அறிவிப்பு
ஈரானிய கடற்படைக்கலன்கள் சேதம்
இதில் 60 கப்பல்கள் மற்றும் 30 கண்ணிவெடி வைக்கும் கப்பல்கள் (Minelayers) உட்பட மொத்தம் 90 ஈரானியக் கடற்படைக் கலன்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன.

முதல் முறையாக, ஈரானின் கண்ணிவெடி தயாரிக்கும் தொழிற்சாலைகள், ஆயுதக் கிடங்குகள் மற்றும் கண்ணிவெடி வைக்கும் கப்பல்களை இலக்கு வைத்து அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.
ஈரானிய ஆட்சியின் பாதுகாப்பு எந்திரத்தை (Security Apparatus) முடக்குவதே இந்தத் தாக்குதல்களின் முதன்மை நோக்கம் என்றும், அச்சுறுத்தலாகத் தெரியும் இடங்களுக்கு முன்னுரிமை அளித்து தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் சென்ட்காம் (CENTCOM) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்
3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி: மே மாதத்தில் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த ராசிகளுக்கு தான்! Manithan