இலங்கை மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய யானை
அண்மையில் கலா ஏரி தேசிய பூங்காவில் வசித்து வந்த பரண என்ற யானை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தது.
பரண யானையின் இறுதிச் சடங்கு நடைபெற்ற போது விசேட சம்பவம் ஒன்றின் மீது பலரும் அவதானம் செலுத்தியுள்ளனர்.
இறுதி சடங்கு இடம்பெற்ற இடத்திற்கு வந்த மற்றுமொரு யானை அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
யானையின் சோகம்
இறுதி சடங்கு நிறைவடைந்து பரண யானையின் உடலை புதைக்கும் வரை மிகவும் சோகத்துடன் பார்த்துவிட்டு, அந்த யானை அங்கிருந்து சென்றுள்ளது.
சிறு வயது முதல் ஒன்றாக வாழ்ந்த தன் நண்பனின் இழப்பை தாங்க முடியாத வேதனையில் குறித்த யானை சோகத்தில் உள்ளதாக அங்கிருந்த வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின்சார வேலி
மனிதர்களை போன்று மிருகங்களும் தம் உறவுகளின் இழப்புகளால் வேதனை அடைவதாக பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.
பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கியே பரண என்ற யானை உயிரிழந்துள்ளதாக, விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.