ஈரானில் ஆட்சி மாற்றமே தீர்வு! அமெரிக்க மக்களுக்கு ட்ரம்ப் விளக்கம் அளிக்க வேண்டும் ஜோ போல்டன் அதிரடி!
ஈரான் மீதான தற்போதைய இராணுவ நடவடிக்கை அமெரிக்க மக்களின் நலனுக்கு எவ்வாறு உகந்தது என்பதை ஜனாதிபதி ட்ரம்ப் தெளிவாக விளக்க வேண்டும் என்று முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் வலியுறுத்தியுள்ளார்.
ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் பயங்கரவாதத்திற்கான அதன் ஆதரவை முற்றிலுமாக ஒழிக்க வேண்டுமானால், அங்குள்ள ஆட்சி முறையை மாற்றியமைப்பதே ஒரே வழி என்று அவர் வாதிட்டுள்ளார்.
ஒரு தீர்க்கமான முடிவு
ஈரானின் பலத்தை வெறும் காயப்படுத்துவதோடு நிறுத்திக்கொண்டால், அது மீண்டும் வளர்ந்து பழைய நிலைக்கே வந்துவிடும் என்றும், எனவே இந்தத் தாக்குதலை ஒரு தீர்க்கமான முடிவை நோக்கி நகர்த்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையில் இஸ்ரேல் மூலோபாயத் திட்டங்களை வகுப்பதாகவும், அமெரிக்கா தனது இராணுவ வலிமை மற்றும் உளவுத்துறை ஆதரவுடன் முன்னின்று வழிநடத்துவதாகவும் போல்டன் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த யுத்தம் ஏன் அவசியம் என்பதை அமெரிக்க மக்களுக்குத் தெளிவுபடுத்தத் தவறினால், டிரம்ப் கடுமையான அரசியல் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதே இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் பொதுவான குறிக்கோள் என்பதை அவர் தனது உரையில் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam