ஜே.வி.பியே நாடாளுமன்றத்தை முற்றுகையிட மக்களை அழைத்தது:பெத்தும் கெர்ணர்
நாடாளுமன்றத்திற்கு அருகில் பொல்துவ சந்தியில் கடந்த 13 ஆம் திகதி எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தது தான் அல்ல எனவும் மக்கள் விடுதலை முன்னணியே அதனை ஆரம்பித்தது எனவும் சமூக ஊடக செயற்பாட்டாளரான பெத்தும் கெர்ணர் தெரிவித்துள்ளார்.
பிமல், லால் காந்த, ஹந்துன்நெத்தி ஆகியோரை நாடாளுமன்றத்தை முற்றுகையிட மக்களை அழைத்தனர்
மக்கள் விடுதலை முன்னணியின் பிமல் ரத்நாயக்க, சுனில் ஹந்துன்நெத்தி, லால்காந்த ஆகியோரே நாடாளுமன்றத்தை முற்றுகையிட அந்த இடத்திற்கு மக்களை அழைத்திருந்தனர் எனவும் அந்த இடத்திற்கு வந்திருந்த மக்களுக்கு உதவவே தான் அங்கு சென்றிருந்ததாகவும் கெர்ணர் கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை பெற கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தனக்கு அழைப்பு விடுத்திருந்தது எனவும் அதற்கு தயாராகவும் சுகவீனம் காரணமாக சில தினங்கள் தாமதமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு வாக்குமூலம் ஒன்றை வழங்க சென்றிருந்த போது ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே பெத்தும் கெர்ணர் இதனை கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் அவரை கைது செய்தனர்.
ஜூலை 13 ஆம் திகதி பொல்துவ சந்திக்கு அருகில் நாடாளுமன்ற வீதிக்கு அருகில் இடம்பெற்ற அத்துமீறல் சம்பவங்கள் தொடர்பாக பெத்தும் கெர்ணர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.