இலங்கையை பாராட்டும் இந்திய - பாகிஸ்தானிய பிரஜைகள்! நள்ளிரவில் குதூகலமான கொழும்பு
இலங்கையில் பலத்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் நேற்றையதினம் இந்திய - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான T20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று முடிந்துள்ளது.
T 20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் மற்றுமொரு குழுநிலைப் போட்டி நேற்று ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றது.
இதில் பாகிஸ்தான் அணியை இந்திய கிரிக்கெட் அணி இலகுவாக வெற்றி கொண்டிருந்தது.
இந்திய ரசிகர்கள்
இந்நிலையில், இந்தப் போட்டியை பார்வையிட வந்த இந்திய, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் இலங்கை தொடர்பில் சிறப்பான பாராட்டுக்களை வெளியிட்டுள்ளனர்.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்றைய தினம் இந்த போட்டி மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
இந்தப் போட்டியை மிகச் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடத்திய இலங்கை அரசுக்கும், பாதுகாப்புப் பிரிவினருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் தங்களது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
மைதான நிர்வாகம் வழங்கிய சிறப்பான வசதிகள் மற்றும் சீரான போக்குவரத்து ஏற்பாடுகள் ரசிகர்களின் அனுபவத்தை மேம்படுத்தியதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் ரசிகர்கள்
மைதானத்தின் தூய்மை மற்றும் பராமரிப்பு குறித்தும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
பெரிய கூட்டத்தை நிர்வகித்த போதிலும், மைதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் மிகவும் சுத்தமாக இருந்தன என இந்திய ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேபோல், மைதானத்திற்குள் நுழைவதற்கான வழிமுறைகள் எவ்வித சிரமமுமின்றி அமைக்கப்பட்டிருந்ததாகப் பாகிஸ்தான் ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.
இலங்கை அரசாங்கத்தின் இந்த ஏற்பாடுகள் தாங்கள் எதிர்பார்த்ததனை விடவும் மிகவும் சிறப்பாக இருந்ததாக இரு நாடுகளையும் சேர்ந்த பலரும் தெரிவித்துள்ளனர்.
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
போர் நடந்தால் டிரம்பிற்கு இது பாடமாக இருக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை News Lankasri
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினிக்கு திருமணம் முடிந்தது... மாப்பிள்ளை யார் தெரியுமா? ஜோடியின் புகைப்படம் இதோ Cineulagam
தற்கொலை செய்துகொள்ளப்போகும் மயில், அதிர்ச்சியில் மீனா.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரோமோ Cineulagam