இந்தியா-பாகிஸ்தான் போட்டியை பார்வையிடாமல் இறுதி நேரத்தில் ரத்து செய்த முக்கியஸ்தர்
பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தலைவர் அமினுல் இஸ்லாம், கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியா-பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக்கோப்பை போட்டியைப் பார்க்க வரும் முடிவை கடைசி நேரத்தில் ரத்து செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்தில் நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, அவர் கொழும்பு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் நேரடியாக டாக்கா திரும்ப முடிவு செய்துள்ளார்.
கடைசி நேரத்தில் ரத்து
தமது நாட்டு அணி போட்டித் தொடரில் விளையாடாதபோது, தேவையில்லாமல் அங்கு சென்று ஏன் பார்க்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக, பங்களாதேஷ் கிரிக்கட் சபையின் அதிகாரி இப்திகார் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்திய கிரிக்கெட் சபையுடன்(BCCI) சுமூகமான உறவை ஏற்படுத்தவும், பேச்சுவார்த்தை நடத்தவும் அவர் இன்று நடைபெறும் கொழும்பு போட்டிக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.
இதேவேளை, பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையிலான கிரிக்கெட் சிக்கல்களைத் தீர்க்க லாகூரில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் அமினுல் இஸ்லாம் முக்கியப் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மஹா சிவராத்திரி 2026 நேரலை
தலைநகரம் பாதுகாப்பாக இல்லை! லண்டனுக்கு இராணுவத்தை அனுப்ப வேண்டிய நேரமிது - நாதிம் ஜஹாவி News Lankasri
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam