கஞ்சிப்பானி இம்ரான் கைது செய்யப்படவில்லை! உறுதிப்படுத்திய பிரதி அமைச்சர்
பாதாள உலகக் குழுத் தலைவரான கஞ்சிப்பானி இம்ரான் கைது செய்யப்படவில்லை என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கஞ்சிப்பானி இம்ரான் விரைவில் இத்தாலியில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்படுவார் என்ற பிரதி அமைச்சர் பொதுக் கூட்டம் ஒன்றில் வெளியிட்ட கருத்தின் ஊடாக கஞ்சிப்பானி இம்ரான் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் பரப்பப்பட்டிருந்தன.
கைது செய்யும் நடவடிக்கை
இந்தநிலையில், இது குறித்து தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கஞ்சிப்பானி இம்ரான் கைது செய்யப்பட்டுள்ளதாக தன்னை மேற்கோள்காட்டி வெளியிடப்படும் செய்திகளில் உண்மையில்லை.
எனினும், கஞ்சிப்பானி இம்ரானை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.