லண்டனில் போராட்டம் படத்தால் அதிர்ந்த அரங்கம் - பாஸ்கரன் கந்தையா நெகிழ்ச்சி
ஈழ சினிமாவின் 64 ஆண்டுகளுக்குப் பின்னரான வளர்ச்சியை "போராட்டம்" திரைப்படத்தில் காணலாம் என ஐபிசி தமிழ் நிறுவனத்தின் உரிமையாளர் பாஸ்கரன் கந்தையா தெரிவித்துள்ளார்.
லண்டனில் உள்ள திரையரங்கில் போராட்டம் திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன்னர் அங்கிருந்தவர்களுடன் உரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஈழத்து சினிமாவை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பலர் பயணித்து வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஐபிசி தமிழ் ஊடகமும் இதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.
இதற்கமைய, ஐபிசி தமிழ் நிறுவனம் குறும்படங்களில் இருந்து பெரிய திரை திரைப்படங்களை வெளியிடும் முயற்சியையும் முன்னெடுத்து வருகின்றது.
அதேவேளை, அதிகளவான திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படமாக போராட்டம் திரைப்படம் பார்க்கப்படுகின்றது என்றார்.