அரசாங்கத்தினால் தடுக்கப்பட்டுள்ள பில்லியன் கணக்கான வரி இழப்பு - அமைச்சர் வெளியிட்ட தகவல்
வரவு - செலவுத்திட்டத்தில் வருமான வரி வரம்பு உயர்த்தப்பட்டதால், அரசாங்கத்திற்கு 16 பில்லியன் ரூபாய் வரி இழப்பு ஏற்படும் என்று வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வரவு - செலவுத்திட்டத்தில் சமூக சீர்திருத்தங்கள்
இந்த பணம் மக்களின் கைகளிலேயே இருக்கும் என்றும், நாங்கள் வீடு திரும்பும் நாளில் வெடிப்பதற்காக மக்கள் பட்டாசுகளை சேமித்து வருகின்றார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கூறினார்.
"மூன்றில் இரண்டு பங்கு ஆட்சியை பெற்றபோதும் பட்டாசுகளை வெடிக்காத மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் இயக்கம் நாங்கள். திசைகாட்டி அரசாங்கம் குறுகிய நாட்களில் நாட்டைக் கட்டியெழுப்புகிறது என்பதையும் இந்த வரவு - செலவுத்திட்டம் நிரூபித்துள்ளது.
இந்த வரவு - செலவுத்திட்டத்தில் சமூக சீர்திருத்தங்கள் தொடர்பான ஏராளமான முன்மொழிவுகளை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம். இதற்கான தேவையான ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
2025-ஆம் ஆண்டில் உள்கட்டமைப்பு அபிவிருத்திக்காக மூலதனச் செலவினத்திற்கு 1016 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
2026-ஆம் ஆண்டிற்கு 1480 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது. 2027 ஆம் ஆண்டிற்கு 2000 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த பணம் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.