100 நாட்கள் கடந்து வைத்தியசாலையில் சுரேஷ் சலே - 10 மருத்துவர்களுக்கு நீதிமன்ற அழைப்பாணை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைக்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு சிகிச்சையளித்த மருத்துவக் குழுவைச் சேர்ந்த 10 மருத்துவர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
இந்த அறிவிப்பு இன்று (02.10.2026) வெளியிடப்பட்டுள்ளது.
10 பேருக்கு அழைப்பாணை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜெனரல் சுரேஷ் சலே, சுமார் 100 நாட்களுக்கும் மேலாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த நிலையில், சுரேஷ் சலேவுக்கு சிகிச்சையளித்த மருத்துவக் குழுவைச் சேர்ந்த 10 மருத்துவர்களும் எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைப் பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இந்த அழைப்பாணையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.