விமல் வீவைன்சவின் மனைவிக்கு சிறைதண்டனை உறுதியானது.. உயர்நீதிமன்றின் அதிரடி தீர்மானம்
சட்டவிரோத வெளிநாட்டு கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றத்திற்காக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு வருட சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று (18) உறுதி செய்துள்ளது.
விளக்கமறியலில் வைக்க உத்தரவு
சிறைத் தண்டனைக்கு எதிராக அவர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீடு இன்று பரிசீலிக்கப்பட்டது.

இதன்பின்னர், தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேனா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, அந்த மேல்முறையீட்டை நிராகரித்து இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பகிரங்க நீதிமன்றத்தில் முன்னிலையான சசி வீரவன்சவை உடனடியாக விளக்கமறியலில் வைத்த தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேன தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, உரிய தண்டனையை நிறைவேற்றுவதற்காக அவரை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தவும் உத்தரவிட்டுள்ளது.