புதிய வாகனங்களை இறக்குமதி செய்த உரிமையாளர்களுக்கு மற்றுமொரு சிக்கல்! வெளியான தகவல்
கடந்த ஆண்டு (2025) மே 16 ஆம் திகதி முதல் பதிவு செய்யப்பட்ட சுமார் 5 இலட்சம் வாகனங்களுக்கு இதுவரை வாகன பதிவு எண்கள் அச்சிடப்படாமையினால் உரிமையாளர்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை மோட்டார் வாகனப்பதிவு எண்கள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போதைய அரசாங்கம் புதிய விநியோகஸ்தரின் கீழ் ஜூன் 8 ஆம் திகதி முதல் வாகனப்பதிவு எண்களை அச்சிட தொடங்கியுள்ளது.
நிலுவையில் இலட்சக்கணக்கான பதிவு எண்கள்
இந்த சூழ்நிலையில், 2025 மே 16 ஆம் திகதி வாகனத்தை பதிவு செய்த வாகன உரிமையாளர், ஒரு வருடம் மூன்று மாதங்கள் கடந்தும், அதற்காக குறைந்தபட்சம் ரூ. 2,000-க்கு மேல் செலுத்தியிருந்தும் பதிவு எண்கள் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

மோட்டார் போக்குவரத்துத்துறை இந்த 5 இலட்சம் உரிமத்தகடுகளுக்காக வாகன உரிமையாளர்களிடமிருந்து 100 கோடி ரூபாய்க்கு மேல் பெற்றுள்ளது.
இந்நிலையில், நிலுவையில் உள்ள இலட்சக்கணக்கான பதிவு எண்கள் விரைவில் அச்சிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், போக்குவரத்து அமைச்சகமும் மோட்டார் போக்குவரத்துத்திணைக்களமும், வாகன உரிமத் தகடுகளை அச்சிடுவதற்காக மார்ச் 10 ஆம் திகதி தெற்காசிய தொழில்நுட்ப நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்நிலையில், அந்த திகதிக்கு முன்பு தேங்கியிருந்த உரிமத்தகடுகளை அச்சிடுவது அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படவில்லை என்றும் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தரமற்ற உரிமத்தகடுகளை பயன்படுத்தியதற்காக வாகன உரிமையாளர்களுக்கு பொலிஸார் அபராதம் விதித்து வருகின்றமை பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பரபரப்பான கட்டத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு! அடுத்துவரும் நாட்களில் வெளிவரவுள்ள பல உண்மைகள்