உக்ரைன் தாக்குதலில் கிரிமியா பாலம் கடுமையாக சேதம்: ஸெலென்ஸ்கி பெருமிதம்
ரஷ்யாவையும் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியா தீபகற்பத்தையும் இணைக்கும் முக்கியமான கெர்ச் பாலத்தை (Crimean Bridge) உக்ரைன் படைகள் கடுமையாகத் தாக்கிச் சேதப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதல், திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட முன்னெப்போதும் இல்லாத இராணுவ நடவடிக்கை என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி வர்ணித்துள்ளார்.
தாக்குதலில் பாலத்தின் பெரும் வளைவுப் பகுதி இடிந்து கடலில் விழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பாலம் சேதம்
இதன்காரணமாக, ரஷ்ய இராணுவத்திற்கான ஆயுதங்கள், எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்து பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாற்றுப் போக்குவரத்தாக உள்ள கடல்வழிப் பாதைகளும் உக்ரைன் தாக்குதல்களுக்கு உள்ளாகும் அபாயம் காணப்படுகிறது.
எனினும் சேதமடைந்த பாலம் முன்பைவிடச் சிறப்பாக மீண்டும் கட்டப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைன் தாக்குதல்
இதற்கிடையில், ரஷ்யா நடத்திய இரவுநேரத் தாக்குதல்களால் உக்ரைன் தலைநகர் கீவின் முக்கியப் பாலங்கள் மூடப்பட்டுள்ளதுடன், குடிநீர் மற்றும் வெப்பமூட்டல் கட்டமைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி,கிரிமியா பாலத்தின் சேதம் ரஷ்ய இராணுவத்தின் விநியோகக் கட்டமைப்புக்கு பெரும் சவாலாக அமையக்கூடும்.
உக்ரைன் – ரஷ்யப் போரில் இது முக்கியமான திருப்பமாக அமையுமா என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும்.