அநுர அரசாங்கத்திற்கு எதிராக அரச ஊழியர்கள் போர்க்கொடி
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட 2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சாதாரண அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனால், எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து, 25,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கை
அதற்கு ஏற்ற வகையில் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக அதன் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
சமகால அரசாங்கம் முன்வைத்து முதலாவது வரவு செலவுத்திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தின் இறுதிகட்டம் அடுத்த வருடம் முதல் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.